டெக்சாஸ் மாகாணத்தில் டெல்டா கொரோனா – நிரம்பி வழியும் ஐசியு படுக்கைகள்

Spread the love

அமெரிக்காவின் டெக்சாஸ் உள்ளிட்ட பல மாகாணங்களில் மீண்டும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து நிலையில், 24 லட்சம் மக்கள் தொகை கொண்ட டெக்சாஸ் மாகாணத்தின் ஆஸ்டின் பகுதியில், தற்போது ஆறு தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகள் மட்டுமே காணப்படுவதாக சுகாதாரப் பிரிவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் டெல்டா வகை வைரஸ் பாதிப்புகள் அதிகரிப்பது குறித்தும், தடுப்பூசி போடுமாறும், தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்க்கவும், முகக்கவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிப்பது உள்ளிட்டவற்றை மின்னஞ்சல்கள், குறுஞ்செய்திகள், மற்றும் தொலைபேசி போன்ற அழைப்புகள் மூலம் மாகாண அரசு மக்களுக்கு அனுப்பி வருகிறது.

மேலும் அமெரிக்காவில் புதிய நோய்த்தொற்றுகள் சராசரியாக தினசரி 1 லட்சத்துக்கும் மேல் உயர்ந்துள்ளதோடு அமெரிக்காவின் வாராந்திர பாதிப்பு 750,000 ஐ கடந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


Spread the love
Related Posts