Site icon itamiltv.com

அரசியல் திருப்பத்தின் பின்னணி – 4,649 வாக்குகள் எப்படி முடிவு செய்தது?

தமிழக அரசியலில் கடந்த ஒரு வாரமாக நடந்துவரும் சம்பவங்கள் பலரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் அமைந்துள்ளன. நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகம் தனது முதல் தேர்தலிலேயே 108 இடங்களை வென்று பெரிய சாதனை படைத்தது. ஆட்சியை அமைக்க 118 இடங்கள் தேவைப்பட்ட நிலையில், காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள், விசிக, ஐயுஎம்எல் உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சிகள் ஆதரவு அளித்ததால் புதிய அரசு அமைந்தது. காங்கிரஸ் கட்சி இந்த அரசில் அமைச்சரவையில் பங்கேற்கும் என்றும், எதிர்கால உள்ளாட்சி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களிலும் இந்த கூட்டணி தொடரும் என்றும் அறிவித்துள்ளது. இதன் காரணமாக திமுகவுடன் இருந்த கூட்டணி முடிவுக்கு வந்தது.

விசிக, இடதுசாரிகள் மற்றும் ஐயுஎம்எல் தற்போது வெளியில் இருந்து ஆதரவு அளிக்கும் நிலைப்பாட்டில் உள்ளன. விசிக தலைவர் தொல்.திருமாவளவன், அமைச்சரவையில் சேர்வது குறித்து இரண்டு வாரங்களில் முடிவு அறிவிப்பதாக கூறியுள்ளார். இதற்கிடையில், தவெக அரசுக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக அதிமுகவுக்குள் பெரிய கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையை எதிர்த்து சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி உள்ளிட்டோர் அணியாக செயல்படுகின்றனர். இவர்கள் விஜய் தலைமையிலான அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். மறுபுறம், அதிகாரப்பூர்வ கொறடா எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி அரசு எதிராக வாக்களிக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Exit mobile version