Site icon itamiltv.com

அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் இடங்கள் நிரப்ப நடவடிக்கை – ராஜ்மோகன்!

பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை விரைவில் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். குறிப்பாக உடற்பயிற்சி ஆசிரியர் பணியிடங்கள் எங்கு காலியாக உள்ளன என்பதை தனியாக ஆய்வு செய்து, அவற்றை நிரப்புவதற்கான பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருவதாக அவர் கூறினார்.

சென்னை கடற்கரை சாலையில் புதிதாக கட்டப்பட்டு வரும் பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் தலைமை அலுவலக பணிகளை அமைச்சர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தலும் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பள்ளி மாணவர்களின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு முதலமைச்சர் விஜய் தலைமையில் ஆலோசித்து, பள்ளிகள் ஜூன் 4ஆம் தேதி திறக்க முடிவு செய்யப்பட்டதாக தெரிவித்தார். மேலும், பாரத சாரண சாரணியர் இயக்கத்தில் மாணவர்கள் இணைந்தால் ஒழுக்கம், பயிற்சி மற்றும் நல்ல வாழ்க்கைத் திறன்கள் கிடைக்கும் என்றும் கூறினார்.

ஆசிரியர் காலிப்பணியிடங்கள் தொடர்பாக விரைவில் ஆய்வுக்கூட்டம் நடத்தி, புதிய அறிவிப்புகள் வெளியிடப்படும் என்றும் அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.

Exit mobile version