இளைஞர்கள் எல்லாம் அதிமுக பக்கம் கொத்து கொத்தாக சேர்க்கிறார்கள், திமுக பாஜகவில் வயதானவர்கள் தான் சேர்கிறார்கள் – முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை.
வருகின்ற 9ஆம் தேதி அவிநாசியில் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவை கண்டித்து எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெறும் ஆர்ப்பாட்டம் தொடர்பாக கோவை மாவட்ட அதிமுக அலுவலகத்தில் ஆலோசணைக் கூட்டம் நடைபெற்றது.
ஆலோசனைக் கூட்டத்தில் கோவை மாவட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசுகையில், ஆ.ராசா மோசமான வார்த்தைகளில் எம்.ஜி.ஆரை விமர்சித்துள்ளார்.
எம்.ஜி.ஆர். இருந்த வரை கருணாநிதியால் தலை தூக்க முடியவில்லை. யார் கட்சி ஆரம்பித்தாலும் எம்.ஜி.ஆர். பெயரை சொல்லாமல் அரசியல் செய்ய முடியாது.
ஆனால் ராசாவை அவர் கண்டிக்கவில்லை. திமுக ஆட்சிக்கு வரகாரணம் எம்.ஜி.ஆர். திமுகவை வளர்த்த பெருமை எம்.ஜி.ஆரையே சேரும்.
எம்.ஜி.ஆரை மோசமாக பேசிய ஆ.ராசாவிற்கு நீலகிரி பாராளுமன்ற தொகுதி மக்கள் பாடம் புகட்டுவார்கள்.
நியாயம் இல்லாமல் மோசமான வார்த்தையில் ஆ.ராசா பேசியுள்ளார். இப்படி நல்லவர்கள் யாரும் பேசமாட்டார்கள். திமுகவில் யாரும் நல்லவர்கள் இல்லை.
அதிமுக கட்சி, சின்னத்தை முடக்க பார்த்தார்கள். உலகில் மிகப்பெரிய கட்சி அதிமுக. திமுகவிற்கு வாக்களிக்க மக்கள் யாரும் தயாராக இல்லை.
திமுகவினரே திமுக ஆட்சிக்கு வாக்களிக்க மாட்டார்கள். கூட்டணி குறித்து எடப்பாடி பழனிசாமி முடிவு செய்வார்.
அதிகமான எம்.பி.க்களை நாம் ஜெயிப்போம். இளைஞர்கள் எல்லாம் அதிமுக பக்கம்.. திமுக, பாஜகவில் புதிதாக யாரும் சேர்வதில்லை. வயதானவர்கள், ஓய்வு பெற்றவர்கள் தான் அக்கட்சிகளில் சேர்க்கின்றனர்.
2024 February 7 : இன்றைய ராசி பலன்!!
நமக்கு எதிரி திமுக தான். அதிமுகவிற்கு போட்டி திமுக உடன் மட்டும் தான். மற்ற கட்சிகள் நம்முடன் போட்டி போடவே முடியாது. சட்டமன்ற தேர்தல் எப்போது வந்தாலும் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வருவார்.
இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எஸ்.பி.வேலுமணி, ஒருங்கிணைந்த கோவை மாவட்ட பொறுப்பாளர்கள் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.
ஆ.ராசா எங்களது நிறுவன தலைவர் எம்.ஜி.ஆரை பற்றி மோசமான வார்த்தையில் பேசியுள்ளார்.
அதை ஒட்டுமொத்தமாக அதிமுக தொண்டர்கள், பொதுமக்கள் கண்டித்துள்ளார்கள். வருகின்ற 9ஆம் தேதி அவிநாசியில் ஆ.ராசாவை கண்டித்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
மக்கள் விரோத திமுக ஆட்சியில் கோவை மாவட்டத்திற்கு எந்த திட்டமும் வரவில்லை. கடந்த 3 ஆண்டுகளில் கோவை மாவட்டம் புறக்கணிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில் எடப்பாடியார் தலைமையில் 40ம் வெல்வோம். திமுக மாவட்ட செயலாளர்கள் அரசு திட்டங்களை துவக்கி வைக்கிறார்கள். அதிகாரிகள் திமுககாரர்களாக மாறிவிட்டார்கள்.
மக்கள் பிரச்சனைகள் குறித்து மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க உள்ளோம் என தெரிவித்தார்.
மேலும் இரட்டை இலை சின்னம் தங்களுக்கு தான் கிடைக்கும் என்ற ஓ.பி.எஸ் கருத்து குறித்த கேள்விக்கு – அவர் பதிலளிக்க மறுத்தபடி கிளம்பிசென்றார்.
மேலும் இக்கூட்டத்தில் உரையாற்றிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களான அம்மன் அர்ஜுனன் மற்றும் பி.ஆர்.ஜி அருண்குமார் திமுகவினரையும் ஆ.ராசாவையும் கடுமையாக சாடினர்.