காதல் உறவுகளில் உடல் ரீதியான தொடுதலின் முக்கியத்துவம் என்ன என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்… உப்பில்லா உணவும் தப்பு.. செக்ஸ் இல்லா காதல் தப்பு..
வார்த்தைகளைத் தாண்டி உடல் நெருக்கம் என்பது ஒரு சக்திவாய்ந்த தகவல் தொடர்பு வழிமுறையாகும்.
உடல் நெருக்கம் என்றால் காதலுடன் கைகளைப் பிடிப்பது அல்லது நெற்றியில் மென்மையான முத்தமிடுவது எதுவாக இருந்தாலும் அது உடல்ரீதியான பிணைப்பு தான். இது ஒரு காதல் உறவை மேலும் ஆழமாக்குகிறது.
“The Five Love Languages’ என்ற புகழ்பெற்ற புத்தகத்தில் காதல் உறவுகளில் மனிதர்கள் அன்பை வெளிப்படுத்தும் ஐந்து முக்கிய வழிகள் பற்றி கூறப்பட்டுள்ளது.
1. உறுதிமொழி, 2. காதலுக்கான நேரம் செலவிடுதல், 3. பரிசுகள் கொடுத்தல் மற்றும் பெறுதல், 4. காதல் சேவைகள் மற்றும் 5. உடல் தொடுதல்.
Live-In Relationship : லிவ்-இன் உறவில் இருப்பவர்களுக்கு புதிய ஆப்பு..
ஒரு காதல் உறவில் நம் காதலை துணைக்கு பிடித்த வகையில் வெளிப்படுத்தும் விதம், இருவருக்குள்ளும் உள்ள உணர்வுபூர்வமான நெருக்கத்தின் ஆழத்தை தீர்மானிக்கிறது.
உடல் தொடுதல் என்பது அடிப்படையில் உங்கள் மூளையுடன் தொடர்புடையது. காதல் உறவுகளில், உடல் தொடுதலின் போது ஏற்படும் உணர்ச்சி உடலியல் நன்மைகளுக்கு வழிவகுப்பதாக அறிவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
நாம் மெதுவாக முத்தமிடும் போதும், துணையை அரவணைக்கும் போதும், நமது உடல் ‘ஆக்ஸிடாஸின்’ வெளியீட்டைத் தூண்டுகிறது. இது ஒரு உறவில் பாதுகாப்பான உணர்வைக் கொடுப்பதன் மூலம் மனஅழுத்தத்தைக் குறைக்கிறது.
மேலும், துணையிடம் பரஸ்பர நம்பிக்கையை வளர்க்கிறது. காதல் உறவில் அன்பான அரவணைப்பின் போது டோபமைன், ஆக்ஸிடாஸின் மற்றும் செரோடோனின் போன்ற சில மூளை இரசாயனங்களின் வெளிப்பாடு மனதிற்கு அமைதியை தருகிறது.
உடல் நெருக்கம் தம்பதிகளுக்கு இடையே ஆழமான கெமிஸ்ட்ரியை உருவாக்கவும் உதவுகிறது. இது பதட்டம், பயம், மனஅழுத்தம் போன்றவற்றுக்கு இயற்கையான தீர்வாகும்.
கடினமான காலங்களில் காதலுடன் கூடிய இனிமையான நெற்றி முத்தம் மற்றும் உங்கள் துணையுடனான உடல் நெருக்கம் அவர்களுக்கு நீங்கள் எப்போதும் பக்கத்தில் நிற்கும் நம்பிக்கை உணர்வை கொடுக்கும்.
அது ஒரு மென்மையான முத்தமாக இருந்தாலும் சரி, அன்பான அணைப்பாக இருந்தாலும் சரி, உடல்ரீதியான தொடுதலாக இருந்தாலும் சரி.. (உப்பில்லா உணவும் தப்பு.. செக்ஸ் இல்லா காதல் தப்பு..)
காதல் உறவில் உடல் நெருக்கம் அன்பைத்தெரிவிக்க வார்த்தைகள் தேவையில்லாத ஒரு இனிமையான சைகை. முக்கியமாக உச்சக்கட்டம் அடையும் போது துணையுடனான நேருக்கு நேர் விழிகள் சந்திப்பு உண்மையான, ஆழமான காதலை வெளிப்படுத்துகிறது.
உறவிற்கு பின் காதலுடனான முத்தம்.. கொஞ்சல் வார்த்தைகள்.. உறவை பற்றிய வெளிப்படையான பேச்சு.. இவையனைத்தும் காதலுக்கு இன்றியமையாதது.
பிரதமர் மோடியின் உரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்களவையிலிருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!
அனைத்திற்கும் பிறகு அன்பான அரவணைப்புகள் அல்லது கைகளை ஒன்றாகப் கோர்த்துப் பிடிப்பது ஆகியவை ஒரு உறவில் பாதுகாப்பு உணர்வை வெளிப்படுத்துகிறது.
காதலுடனான உடல் தொடுதலின் மிகப்பெரிய சக்தி என்னவென்றால், அது நம்பிக்கையையும், காதலையும் வளர்க்கிறது. உறவுகளுக்கிடையே சந்தேகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கிறது.