விதிமுறைகளை மீறி செயல்பட்டதாகக் கூறி காங்கிரஸ் கட்சியின் கணக்கை டிவிட்டர் நிறுவனம் தற்காலிகமாக முடக்கியுள்ளது.
ஏற்கனவே காங்கிரஸ் கட்சி எம்.பி ராகுல் காந்தி, மாணிக்கம் தாகூர் உள்ளிட்டோர் டிவிட்டர் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன நிலையில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களின் பக்கங்களும் முடக்கப்பட்டுள்ளதோடு காங்கிரஸ் மக்களவை ரந்தீப் சுர்ஜிவாலா, கே.சி.வேணுகோபால், சுஷ்மிதா தே, கொறடா மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட தலைவர்களின் ட்விட்டர் பக்கங்களும் முடக்கப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக காங்கிரஸ் சமூக வலைதளப் பிரிவு தலைவர் ரோகன் குப்தா கருத்துத் தெரிவித்துள்ளார். அதில் என்ன நடந்ததாலும் காங்கிரஸ் மக்களுக்காக குரல் கொடுப்பதை தடுக்க முடியாது என்றும் அரசின் அழுத்தம் காரணமாகவே நாடு முழுவதும் 5,000 ற் க்கும் மேற்பட்ட காங்கிரஸ் தலைவர்கள், நிர்வாகிகளின் ட்விட்டர் பக்கங்கள் முடக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.