கொட்டித் தீர்க்க போகுது மழை..!
தமிழ்நாட்டில் பிப்ரவரி 10 மற்றும் 11 ஆகிய தேதிகள் தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது..,
வருகிற பிப்ரவரி 5 ஆம் தேதி மற்றும் 6 ஆம் தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக் கூடும்.
அதிகாலையில், ஓரிரு இடங்களில் லேசான பனி மூட்டத்திற்கு வாய்ப்பு உள்ளது. தொடர்ந்து பிப்ரவரி 7 ஆம் தேதி முதல் பிப்ரவரி 9 ஆம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக் கூடும்.
பிப்ரவரி 10 மற்றும் 11 ஆகிய தேதிகள் தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.
மற்ற பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக் கூடும் (கொட்டித் தீர்க்க போகுது மழை).
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும்.
நகரின் ஒரு சில பகுதிகளில் அதிகாலை வேளையில் லேசான பனி மூட்டத்திற்கு வாய்ப்பு உள்ளது.
வெப்பநிலையைப் பொறுத்தவரையில் அதிகபட்ச வெப்ப நிலை 31 – 32 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22 – 23 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக் கூடும்.
மேலும், மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதும் இல்லை என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.