சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கு: காலஅவகாசம் கேட்டு அமைச்சர் செந்தில்பாலாஜி கடிதம்.

அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்தபோது அரசு வேலை வாங்கித்தருவதாக 81 பேரிடம் ஒரு கோடியே 62 லட்சம் ரூபாய் பணம் வாங்கி மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

அதனடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு 3 வழக்குகளை பதிவு செய்த நிலையில், அதில் இரு வழக்குகள் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக கடந்த ஆகஸ்ட் 9ஆம் தேதி வழக்குப்பதிவு செய்த அமலாக்கத்துறை, மதுரையில் உள்ள துணை அலுவலகத்தில் இன்று நேரில் ஆஜராக வேண்டுமென செந்தில் பாலாஜிக்கு சம்மன் அனுப்பியிருந்தது.

இந்நிலையில் சட்டப்பேரவை நிகழ்வுகளில் பங்கேற்க வேண்டி இருப்பதால், விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் இருந்து ஒரு மாதம் கால அவகாசம் கேட்டு அமலாக்கத்துறைக்கு செந்தில் பாலாஜி கடிதம் எழுதியுள்ளார்.

Total
0
Shares
Related Posts