சிறையில் பெண் கைதிகள் கர்ப்பம்.. சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு!!

சிறையில் பெண் கைதிகள் கர்ப்பம்
சிறையில் பெண் கைதிகள் கர்ப்பம்
Spread the love

சிறையில் பெண் கைதிகள் கர்ப்பம்..

மேற்கு வங்காளத்தில் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டு உள்ள பெண் கைதிகள் கர்ப்பம் தரித்து குழந்தை பெற்றெடுக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மேற்கு வங்காளத்தில் ஆட்சி செய்து வருகிறது.

இதையும் படிங்க : Shock In Midair : விமானத்தில் ரத்தம் கக்கி இறந்த நபர்… அலறிய பயணிகள்!!

இந்த நிலையில், அம்மாநிலத்தின் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டு உள்ள பெண் கைதிகள் கர்ப்பிணியாவதும் (சிறையில் பெண் கைதிகள் கர்ப்பம்), அவர்களுக்கு குழந்தைகள் பிறப்பதும் பெரும் சர்ச்சையாகி உள்ளது.

இதுகுறித்து சுப்ரீம் கோர்ட்டு மூத்த வழக்கறிஞர் கவுரவ் அகர்வால் என்பவர் தானாக முன்வந்து கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

சிறை சீர்திருத்தங்கள் மற்றும் கூர்நோக்கு இல்லங்கள் தொடர்புடைய வழக்கில் அவர் தாக்கல் செய்த விவரங்களில்,

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள பல்வேறு சிறைகளில் அடைப்பட்டிருக்கும் பெண் கைதிகள் கர்ப்பமடைந்த நிலையில், இதுவரை அப்பெண்களுக்கு 196 குழந்தைகள் பிறந்துள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதையும் படிங்க : கோயம்பேடு முனையத்தில் இருந்து ஆம்னி பேருந்துகள் பயணிகளை ஏற்றி, இறக்கலாம் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுபற்றி உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி.எஸ். சிவஞானம் மற்றும் நீதிபதி சுப்ரதிம் பட்டாச்சார்யா ஆகியோர் அடங்கிய அமர்வு தீவிர கவனத்து வருகிறது.

இந்த சம்பவம் குறித்த வழக்கனது, குற்ற வழக்குகளை விசாரிக்கும் அமர்வு முன் விசாரணை நடத்தப்படும் என்றும் அந்த அமர்வு அறிவித்தது.

இதனிடையே இந்த வழக்கில், பெண் கைதிகளை அடைத்து வைக்கப்பட்டிருக்கும் பகுதிகளுக்குள் ஆண் பணியாளர்கள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் கவுரவ் அகர்வால் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதையும் படிங்க : கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட MyV3 ADS நிறுவனத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் கைது!

மேலும், இந்த வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதி அசானுதீன் அமனுல்லா மற்றும் நீதிபதி சஞ்சய் குமார் அடங்கிய அமர்வு ஒன்று கவனத்தில் கொண்டுள்ளது.

எனவே, கவுரவ் அகர்வால் தொடுத்துள்ள இந்த வழக்கில் சிறைகளின் நிலைமையை ஆய்வு செய்து அறிக்கை ஒன்றை தங்களிடம் சமர்ப்பிக்கும்படி உச்ச நீதிமன்ற அமர்வு கேட்டு கொண்டுள்ளது.


Spread the love
Related Posts