Site icon itamiltv.com

தமிழக வளர்ச்சித் திட்டங்களுக்கு முன்னுரிமை கோரிய முதலமைச்சர் விஜய்!

தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய், இரண்டு நாள் டெல்லி பயணத்தின் போது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை அவரது அலுவலகத்தில் சந்தித்து முக்கிய கோரிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினார். இதற்கு முன் பிரதமர் நரேந்திர மோடியையும் சந்தித்திருந்த முதலமைச்சர், தமிழ்நாட்டின் வளர்ச்சி திட்டங்களுக்கு மத்திய அரசின் கூடுதல் ஆதரவை கோரினார்.

இந்த சந்திப்பில் தமிழகத்தின் உட்கட்டமைப்பு வளர்ச்சிக்காக துறைமுகங்கள், நெடுஞ்சாலைகள், ரயில்வே திட்டங்கள் மற்றும் தொழில் வழித்தடங்களுக்கு முன்னுரிமை அளித்து நிதி ஒதுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும், தமிழ்நாட்டின் கல்வி மற்றும் தொழில் வளர்ச்சியை மேம்படுத்த தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனங்களை மாநிலத்தில் அமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

அதேபோல் ஓசூர், கோயம்புத்தூர் மற்றும் மதுரை நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டங்களை செயல்படுத்த தேவையான நிதியை ஒதுக்குமாறும் நிர்மலா சீதாராமனிடம் முதலமைச்சர் விஜய் கோரிக்கை வைத்துள்ளார். தமிழகத்தின் வேகமான வளர்ச்சிக்கு மத்திய அரசு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Exit mobile version