ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆதிக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது ஒரே வாரத்தில், ஏழு தலைநகர்களை கைப்பற்றிய தலிபான்கள் ஆப்கானிஸ்தானின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள பாக்லான் மாகாணத்தின் தலைநகரான பூல்-இ-ஹுமியை நேற்று மாலை கைப்பற்றினர். கிட்டத்தட்ட 65 சதவிகித நிலபரப்பை தலிபான்கள் கைப்பற்றிவிட்டதாகக் தகவல் வெளியாகி உள்ளது
இந்நிலையில் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆப்கன் தலைவர்கள் ஒன்றிணைய வேண்டும் என்றும் தலிபான்களை விட ஆப்கன் படைகள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர் என்றும் கூறியுள்ளார். எனவே அவர்கள் போரிடவே விரும்புவார்கள் என்று கூறியுள்ள அதிபர் ஜோ பைடன் அவர்களுக்காகவும் அவர்களின் நாட்டுக்காகவும் ஆப்கன் தலைவர்கள் தொடர்ந்து போரிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார் .
மேலும் ஆப்கானிஸ்தானிலிருந்து படைகளை திரும்ப பெறும் முடிவு குறித்து வருந்தவில்லை என்றும் கடந்த 20 ஆண்டுளில் 1 ட்ரில்லியன் டாலர்களை செலவழித்துள்ளோம் என்று கூறியுள்ளார். மேலும் ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்களை இழந்துள்ளதாகவும் ஆப்கானுக்கு தேவையான உபகரணங்கள், விமானம், உணவு, ஆப்கன் படைக்கு ஊதியம் ஆகியவற்றை அமெரிக்க தொடர்ந்து வழங்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, ஆப்கானிஸ்தானின் ஜனநாயக விழுமியத்தை காக்க மக்கள் முன்வர வேண்டும் என அந்நாட்டு அதிபர் அஷ்ரப் கானி கோரிக்கை விடுத்துள்ளார்.