Site icon itamiltv.com

நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்தால் அரசு நிலை என்ன?

தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, சட்டமன்றத்தில் பெரும்பான்மை பெற்ற கட்சி அல்லது கூட்டணியை ஆளுநர் அரசு அமைக்க அழைப்பார். அதற்குப் பிறகு, ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி, தங்களிடம் பெரும்பான்மை ஆதரவு இருப்பதை நிரூபிக்க வேண்டும்.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் மொத்தம் 234 தொகுதிகள் உள்ளன. இதில் ஒரு கட்சி அல்லது கூட்டணி ஆட்சி அமைக்க குறைந்தது 118 உறுப்பினர்களின் ஆதரவு அவசியமாகும். இந்த எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு தான் பெரும்பான்மை தீர்மானிக்கப்படுகிறது.

முதலமைச்சர் அல்லது ஆளுநர் நியமித்தவர், தனது அரசுக்கு ஆதரவு இருப்பதை நிரூபிக்க “நம்பிக்கை தீர்மானம்” கொண்டு வருவார். அதன் பின்னர் சபாநாயகர் குரல் வாக்கெடுப்பு அல்லது உறுப்பினர்களை எண்ணி வாக்கெடுப்பு நடத்துவார்.

ஒரு அரசு இந்த வாக்கெடுப்பில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாவிட்டால், ஆளுநர் அந்த அரசை கலைத்து, குடியரசுத் தலைவர் ஆட்சியை பரிந்துரைக்கலாம். தற்போதைய சூழலில் தவெக அரசுக்கு சுமார் 120 எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் சில அரசியல் மாற்றங்களால் நம்பிக்கை வாக்கெடுப்பில் அவர்களுக்கு கூடுதல் ஆதரவு கிடைக்கும் வாய்ப்பு இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

Exit mobile version