Site icon itamiltv.com

பிறப்பு சான்றிதழ் பெற புதிய டிஜிட்டல் சேவை… விரைவில் அமலுக்கு!

பிறப்புச் சான்றிதழை பொதுவாக மாநகராட்சியின் இணையதளத்தில் சென்று மக்கள் எளிதாக பதிவிறக்கம் செய்து கொண்டு வந்தனர். ஆனால் தற்போது இந்த முறையில் சில மாற்றங்களை கொண்டு வர மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

ஒரு குழந்தையின் பிறப்பு பெயர் இல்லாமல் பதிவு செய்யப்பட்டிருந்தால், பிறப்பு பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து 12 மாதங்களுக்குள் பெற்றோர் அல்லது பாதுகாவலர் எழுத்துப்பூர்வமான உறுதிமொழியை பிறப்பு-இறப்பு பதிவாளரிடம் அளித்து எந்த கட்டணமும் இல்லாமல் குழந்தையின் பெயரை பதிவு செய்யலாம்.

அதே நேரத்தில் 12 மாதங்கள் கடந்த பிறகு குழந்தையின் பெயரை பதிவு செய்ய வேண்டுமெனில், 15 ஆண்டுகளுக்குள் ரூ.200 காலதாமத கட்டணம் செலுத்தி பதிவு செய்யும் வசதி பிறப்பு-இறப்பு பதிவுச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழை முன்பு போல இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். இதற்கு கூடுதலாக, பெற்றோரின் வாட்ஸ்அப் எண்ணுக்கு நேரடியாக பிறப்புச் சான்றிதழை அனுப்பும் புதிய வசதியையும் மாநகராட்சி அறிமுகப்படுத்த உள்ளது. மேலும் 9445061913 என்ற வாட்ஸ்அப் எண்ணின் மூலம் சான்றிதழை பெறும் வசதியும் விரைவில் அமலுக்கு வர உள்ளது.

Exit mobile version