முதலமைச்சரின் ஸ்பெயின் பயணம் மூலம் உயர்தர அளவிலான வேலைவாய்ப்புகள் தமிழகம் முழுவதும் வர வாய்ப்பு உள்ளதாக தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா தெரிவித்துள்ளார்.
இன்று செய்தியாளர்ர்களுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது..
ஸ்பெயின் பயணம் மூலம் உயர்தர அளவிலான வேலைவாய்ப்புகள் தமிழகம் முழுவதும் வர வாய்ப்பு உள்ளது.
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கையெழுத்தான ஒப்பந்தகளில் 70% சதவிதத்திற்கு மேல் நடைமுறைக்கு வர வாய்ப்பு. தொழில்துறை இதுவரை வரலாறு காணாத வளர்ச்சியை கண்டு வருகிறது.
முதலமைச்சர் பல நாடுகளுக்கு சுற்றுபயணம் சென்று பல்லாயிர கணக்காண முதலீடுகளை தமிழகத்துக்கு ஈர்த்து கொண்டு உள்ளார்.
இதையும் படிங்க : வடுகபட்டி பூண்டு சந்தை பின்னணி – 150 ஆண்டுகளுக்கு முன்?
முதலில் ஐக்கிய அரபு நாடுகள், அதன்பிறகு சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு சென்றார்.
தற்போது வெற்றிகரமாக ஸ்பெயின் நாட்டில் சுற்றுப்பயணத்தை முடித்து வந்துள்ளார்.
முதலமைச்சரின் ஸ்பெயின் பயணம் மூலம் 3440 கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது..
எடிபான் நிறுவனம் 540 கோடி ரூபாய்க்கும், ரோக்கோ நிறுவனம் 400 கோடி ரூபாய்க்கும் முதலீடு செய்ய உள்ளனர்.
இதுமட்டுமன்றி ஹப்க் லாய்டு நிறுவனம் 2500 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது. ஹபக் லாய்டு முதலீடுகள் தமிழகம் முழுவதும் வர உள்ளது.
எடிபான் நிறுவன் செண்டர் ஆப் எக்சலன்ஸ் ஒன்றை அமைக்க உள்ளது. அதில் சிறப்பு அம்சங்கள் பல உள்ளது. அதனை செயல்படுத்து தொடர்பாக முதல்வர் அறிவிப்பார்.
படித்த இளைஞர்களுக்கும், நான் முதல்வன் திட்டம் மூலம் திறன் மேம்பாட்டு பயிற்சி பெறும் இளைஞர்களுக்கான சிறப்பான அறிவிப்பு அதில் உள்ளது.
உயர்தர அளவிலான பல்லாயிரகணக்கான வேலைவாய்ப்புகள் தமிழகம் முழுவதும் வர வாய்ப்பு உள்ளது.
இதற்கு முன்பு நடந்த மாநாடுகளில் கையெழுத்தான ஒப்பந்தங்கள் எந்த அளவுக்கு நடைமுறைக்கு வந்தது என்பது அனைவருக்கும் தெரியும்.
முதல்வர் ஜப்பான் சென்று வந்தவுடன், ஜப்பான் நிறுவனம் தமிழகத்தில் பணியை துவங்கி விட்டது.
உலக முதலீட்டாளர்கள் மாநாட்ட்டில் கையெழுத்தான ஒப்பந்தங்களில் பல திட்டங்கள் இம்மாதமே துவங்க உள்ளன.
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கையெழுத்தான ஒப்பந்தகளில் 70% சதவிதத்திற்கு மேல் நடைமுறைக்கு கொண்டுவர வாய்ப்பு உள்ளது.
வரலாறு காணத அளவிற்கு தங்கள் அனைத்தும் முதலீடுகளாக மாறி வருகிறது என்று கூறியுள்ளார்.