ITamilTv

லால் சலாம் படத்தில் பம்பா பாக்யா, சாகுல் ஹமீது – மேஜிக் செய்த ஏ.ஆர்.ரகுமான்.

Lal-salaam மில் பாடிய பம்பா பாக்யா, சாகுல் ஹமீது - மேஜிக் செய்த ஏ.ஆர்.ரகுமான்.

Spread the love

லால் சலாம் (Lal salaam) படத்தில் இடம்பெறும் திமிறி எழுடா பாடலுக்காக மறைந்த பாடகர்கள் இருவரின் குரலை AI மூலம் பயன்படுத்தி ஏ.ஆர்.ரகுமான் அசத்தியுள்ளார்.

தமிழ் சினிமாவின் இளம் கதயநாயகர்கள் பட்டியலில் டாப் 10 இடத்திற்குள் இருபவர்க்ள விஷ்ணு விஷால், விக்ராந்த்.

இவர்களின் கூட்டணியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளான ஐஸ்வர்யாவின் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘லால் சலாம்’

இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இதில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தும் கேமியோ ரோலில் நடித்திருக்கிறார்.

கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகி உள்ள இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து உள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் டப்பிங் பணிகள் முடிவடைந்த நிலையில் தற்போது இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் ஜெட் வேகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது .

இப்படம் வருகிற பிப்ரவரி 9-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ள நிலையில், அப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் உள்ள சாய் ராம் கல்லூரியில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர். இதில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தும் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

இந்த இசை வெளியீட்டு விழாவில் லால் சலாம் பட (Lal salaam) பாடல்கள் ஒவ்வொன்றாக வெளியிடப்பட்டன.

இதையும் படிங்க : teacher attack: தமிழில் பேசிய 5ம் வகுப்பு மாணவன்- கொடூரமாக தாக்கிய ஆசிரியை!

இதில் திமிறி எழுடா என்கிற என்ற பாடலும் இடம்பெற்றது. அப்போது இந்த பாடலை மறைந்த பாடகர்களான பம்பா பாக்யா மற்றும் சாகுல் ஹமீது பாடி உள்ளதாக குறிப்பிட்டப்பட்டது.

இதில் பம்பா பாக்யா மறைந்து ஓராண்டும், சாகுல் ஹமீது மறைந்து கிட்டத்தட்ட 27 ஆண்டுகளும் ஆகி உள்ளதால் இவர்களது குரலில் எப்படி சாத்தியம் என கேள்வி எழுந்தது.

அவர்களின் குரலை உள்ள AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஏ.ஆர்.ரகுமான் உருவாக்கி உள்ளார்.

https://x.com/ITamilTVNews/status/1750842710981050555?s=20

சமீப காலமாக AI தொழில்நுட்பம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த AI தொழில் நுட்பத்தை பயன்படுத்தி ஒருவரின் முகத்தை தத்துருபமாக இன்னொருவரின் உருவத்துடன் மாற்ற முடியும்.

அதே போல் ஒருவரின் குரலை வைத்து AI தொழில் நுட்பத்தை பயன்படுத்தி பாடலையும் உருவாக்க முடியும். இது போல தான் அவர்களின் குரலை லால் சலாம் பட பாடலுக்கு பயன்படுத்தி இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் புது டிரெண்டை உருவாக்கி இருக்கிறார்


Spread the love
Exit mobile version