Site icon itamiltv.com

விஜய்க்கு உலகளாவிய வாழ்த்துகள் – அரசியல் வரலாற்றில் புதிய அத்தியாயம்!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், இன்று தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்றார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற விழாவில் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்வுக்கு பல அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். பிரதமர் நரேந்திர மோடியும் தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.

இதற்கிடையில் ஆப்பிரிக்காவின் தான்சானியா நாட்டைச் சேர்ந்த சமூக ஊடக பிரபலமான கிலி பால் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்தது இணையத்தில் அதிக கவனம் பெற்றுள்ளது. இந்திய திரைப்பட பாடல்கள் மற்றும் வசனங்களுக்கு லிப்-சிங்க் செய்து வீடியோக்கள் வெளியிடுவதன் மூலம் அவர் உலகம் முழுவதும் ரசிகர்களை பெற்றுள்ளார்.

தனது இன்ஸ்டாகிராம் வீடியோவில், “இளையதளபதி சார், நீங்கள் முதலமைச்சராக பதவியேற்றது எனக்கு மிகவும் மகிழ்ச்சி. உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். நீங்கள் இன்னும் பல வெற்றிகளை பெற வேண்டும். நான் உங்கள் பெரிய ரசிகன்,” என்று கூறினார்.

மேலும், “தமிழக வெற்றிக் கழகம்” என்ற கட்சியின் பெயரை சரியாக உச்சரித்து வாழ்த்து தெரிவித்தது பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. இதனால் அவரது வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.

Exit mobile version