அமலாக்கத்துறை சோதனை குறித்து முன்னாள் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பரபரப்பான கருத்தை தெரிவித்துள்ளார். “என் வீட்டில் ED சோதனை நடத்த வேண்டும் என்பது சிலரின் நீண்ட நாள் விருப்பமாக இருந்தது. குறிப்பாக ராகுல் காந்தி போன்றவர்களுக்கு இந்த சோதனை மனநிறைவை தரக்கூடும்” என்று அவர் கூறியுள்ளார். பினராயி விஜயனின் மகள் வீணாவுக்கு சொந்தமான எக்ஸாலாஜிக் சொல்யூஷன்ஸ் நிறுவனத்திற்கு, கொச்சின் மினரல்ஸ் மற்றும் ரூட்டைல் லிமிடெட் நிறுவனம் சட்டவிரோதமாக ரூ.1.72 கோடி வழங்கியதாக 2018 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக அமலாக்கத்துறை பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் நடவடிக்கைகளை ரத்து செய்ய கோரிய மனுவை கேரள உயர்நீதிமன்றம் நிராகரித்தது. இதையடுத்து திருவனந்தபுரத்தில் உள்ள பினராயி விஜயனின் வீட்டிலும், அவரது மருமகன் மற்றும் முன்னாள் அமைச்சர் முகமது ரியாஸ் வீட்டிலும் ED அதிகாரிகள் சோதனை நடத்தினர். மேலும் பல தொடர்புடைய இடங்களிலும் சோதனை நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமலாக்கத்துறை ரெய்டு குறித்து பினராயி விஜயன் கூறிய அதிரடி கருத்து!

