அர்ச்சனா பேசுற எல்லாமே பொய் : நடந்து முடிந்த பிக் பாஸ் நிகழ்ச்சி ஏழாவது சீசனில் பிரபல சின்னத்திரை நடிகையான அர்ச்சனா டைட்டில் வின்னர் ஆக வெற்றி பெற்றார்.
இந்நிலையில் அர்ச்சனா ஆரி அளவிற்கு பிக் பாஸ் வீட்டிற்குள் எதுவும் செய்யவில்லை என்றும், வாயை திறந்தாலே உருட்டு உருட்டு என்று உருட்டுகிறார் என்றும் அவரை மீம்ஸ் கிரியேட்டர்கள் கலாய்த்து வந்தனர்.
இதையும் படிங்க : தலித் சிறுமி சித்ரவதை : குற்றவாளிகளுக்கு பிணை கொடுக்கக்கூடாது – எவிடென்ஸ் கதிர்!
உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில், இரண்டாவது முறையாக ஒரு பெண் போட்டியாளர் டைட்டில் வின்னர் ஆகியுள்ளார்.
பிக் பாஸ் சீசன் 7 வின்னரான அர்ச்சனா டைட்டிலை வென்று வீட்டிற்கு வந்த பிறகும் பல சர்ச்சைகள் தொடர்ந்து எழுந்து வந்தது.
இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற நடிகர் ஆரி அவர்களை விட அதிக வாக்குகள் பெற்று அர்ச்சனா வெற்றி பெற்றார் என்று அர்ச்சனாவின் ஆதரவாளர்கள் சிலர் கூறி வந்தனர்.
ஆனால் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த ஆரி ரசிகர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் ஆரி அவர்கள் செய்த விஷயங்களில் ஒரு சதவீதம் கூட அர்ச்சனா செய்யவில்லை என்றும்,
ஒரு டாஸ்கை கூட ஒழுங்காக விளையாட முடியாத அர்ச்சனாவிற்கு டைட்டில் கொடுத்ததே ஏற்றுக் கொள்ள முடியாது.
அது மட்டும் இல்லாமல் ஆரியோடு அவரை ஒப்பிட்டு பேசவும் முடியாது என்று தொடர் கண்டனங்களை தெரிவித்து வந்தனர் (அர்ச்சனா பேசுற எல்லாமே பொய்).
இதையும் படிங்க : நடிகர் ஆரி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவு!
இந்த நிலையில் இதனைப் பார்த்த நடிகர் ஆரி இதுகுறித்து தன்னுடைய twitter பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில்,
“மக்களே அர்ச்சனா அவரைப் பற்றி இனியும் தவறாக பேச வேண்டாம். இது அர்ச்சனாவின் வெற்றியை கொண்டாட வேண்டிய தருணம். நாம் அனைவரும் சேர்ந்து அவருடைய எதிர்கால வாழ்க்கைக்கு வாழ்த்துகளை மட்டுமே தெரிவிப்போம்.
வன்மங்கள் இனி வேண்டாம்.. அன்பு மட்டுமே போதும்”.. என்று கூறி ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.