இலங்கை திரிகோணமலை ஹிந்து கல்லூரி மைதானத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டைமான் தலைமையில் நடன விழா நடைபெற்றது.
ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதத்தில் வரும் பொங்கல் பண்டிகை மிகவும் பிரபலமான இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் முக்கியமான ஒரு பண்டிகை.
இந்த பொங்கல் பண்டிகையை தமிழர்கள் அறுவடைத் திருநாள், உழவர் திருநாள் என்றும் அழைப்பர்.
மேலும் இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு மாதிரி வெவ்வேறு பெயரால் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த பண்டிகையின் போது பெங்காலிகள் இனிப்புக்களை உருவாக்குவார்கள், தமிழர்கள் மற்றும் தெலுங்கர்கள் வீட்டின் பழைய பொருட்களை எரிப்பார்கள்,பஞ்சாபிகள் நெருப்பை உருவாக்குவார்கள்.
சுருக்கமாக கூற வேண்டுமானால், ஒட்டுமொத்த தேசமும் அறுவடைக்கான புதிய பருவத்தை வெவ்வேறு பாணிகளில் சந்தோஷம் என்ற ஒரே கருத்துடன் வரவேற்கிறார்கள்.
இதையும் படிங்க : https://itamiltv.com/veeranam-lake-anbumani-insists-to-clean/
அந்த வகையில் இலங்கை திரிகோணமலை ஹிந்து கல்லூரி மைதானத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டைமான் தலைமையில் ஜன.6-ம் தேதி பொங்கல் விழா தொடங்கியது.
2024 பொங்கல் விழாவை வரவேற்கும் விதமாக 1500 நடன கலைஞர்கள் ஒன்றிணைந்து நடனமாடினர்.
இலங்கை(sri lanka) கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டைமான் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
இந்த நடன நிகழ்ச்சியில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த மாணவிகள் பங்கேற்று சிறப்பித்தனர்.
திருகோணமலையில் 1500 நடன கலைஞர்கள் பொங்கல்விழாவில் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க : https://x.com/ITamilTVNews/status/1744619426081882131?s=20
1500 கலைஞர்கள் பங்குபெற்ற நடன நிகழ்ச்சியின் கழுகு பார்வை புகைப்படம்
இந்த பிரம்மாண்ட நடன விழாவை, பல மக்கள் கண்டுகளித்தனர்.
பொங்கல் விழாவை வரவேற்கும் முகமாக நேற்றுமுன்தினம் ஜல்லிக்கட்டு போட்டி இடம்பெற்ற நிலையில் தொடர்ச்சியாக பல விளையாட்டுக்கள் இடம்பெற்று வருகின்றன.
மேலும் இந்நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக நடிகர் பிரசாத் ,அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பல தலைவர்கள் கலந்த கொண்டனர்.
இலங்கை வரலாற்றில் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. தற்பொழுது இந்த புகைபடங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.