Site icon itamiltv.com

கோயம்பேடு பேருந்து நிலையத்தை மீண்டும் செயல்படுத்துங்கள் – முதல்வர் விஜய்க்கு மனு!

சென்னை நகரில் தினமும் பள்ளி, கல்லூரி, தொழிற்சாலை மற்றும் ஐ.டி. நிறுவனங்களுக்கு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஆனால் வெளியூர் பயணங்களுக்கு சுமார் 3 ஆயிரம் பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன. இந்த நிலையில், தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளை மீண்டும் கோயம்பேடு பேருந்து நிலையம் இருந்து இயக்க வேண்டும் என்று ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.

அவர்கள் கூறுவதாவது, போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக உருவாக்கப்பட்ட கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் தற்போது பயணிகளுக்கு முழுமையான வசதிகளை வழங்கவில்லை. குறிப்பாக, சென்னை மத்திய மற்றும் வடக்கு பகுதிகளில் இருந்து வரும் பயணிகள் கிளாம்பாக்கம் செல்ல இரண்டு மணி நேரத்திற்கும் மேல் செலவிட வேண்டிய சூழல் உள்ளது. மெட்ரோ மற்றும் மின்சார ரயில் இணைப்புகள் இன்னும் முழுமையாக செயல்படாததால் கூடுதல் சிரமம் ஏற்படுகிறது.

இதனால் பலர் தனியார் வாகனங்களை பயன்படுத்தி பயணம் செய்வதால் போக்குவரத்து நெரிசலும் சுற்றுச்சூழல் மாசுபாடும் அதிகரிக்கிறது. எனவே, பொதுமக்களின் வசதியை கருத்தில் கொண்டு தென் மாவட்ட பேருந்துகளை மீண்டும் கோயம்பேடு நிலையத்திலிருந்து இயக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சங்கம் கோரியுள்ளது.

Exit mobile version