Site icon itamiltv.com

“தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடணும்” – பிரதமரிடம் வலியுறுத்திய முதல்வர் விஜய்!

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய், மாநில நலன்களை சார்ந்த பல முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தார். சுமார் 10 நிமிடங்கள் நடைபெற்ற இந்த சந்திப்பில், தமிழ்நாட்டின் பல்வேறு பிரச்சினைகள் குறித்து மனுவும் வழங்கப்பட்டது. குறிப்பாக, அரசு விழாக்களின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாடுவதற்கான தெளிவான வழிகாட்டுதலை மத்திய அரசு வழங்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார். மேலும், பாதுகாப்புத்துறையின் முக்கிய அமைப்பான CABS மையத்தை தமிழ்நாட்டில் அமைக்க வேண்டுமெனவும் வலியுறுத்தினார். காவிரி ஆற்றில் கர்நாடக அரசு மேகதாது அணை திட்டத்தை முன்னெடுத்து வருவது தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிவித்து, அதற்கு அனுமதி வழங்கக்கூடாது என்றும் கோரிக்கை வைத்தார். இதோடு, இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளையும் உடனடியாக விடுவிக்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பிரதமரிடம் முதலமைச்சர் விஜய் வலியுறுத்தினார்.

Exit mobile version