தற்காலிக ஓட்டுநர், நடத்துனர்களுக்கு அரசு அழைப்பு!

temporary driver
temporary driver
Spread the love

தைப்பொங்களை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ள நிலையில், பேருந்துகளை இயக்க தற்காலிக ஓட்டுநர் (Temporary) மற்றும் நடத்துனர்களுக்கு தமிழ்நாடு அரசு அழைப்பு விடுத்துள்ளது.

தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 1.30 லட்சம் போக்குவரத்து தொழிலாளர்கள் பணியாற்றுகிறார்கள். இந்நிலையில் இவர்களுக்கான கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 8 ஆண்டுகளாக பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்று வந்திருக்கின்றன.

இந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு போக்குவரத்து தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது.

பல்வேறு போக்குவரத்து சங்கங்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை அடுத்து கடந்த 9ம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது.

அண்ணா தொழிற்சங்க பேரவை முன்னின்று நடத்தி வரும் இந்த போராட்டத்தில் பங்கேற்காது என ஐ.என்.டி.யூ.சி தொழிற்சங்கத்தின் முதன்மை பொதுச்செயலாளர் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் போராட்டத்தில் பங்கேற்காத தொழிற்சங்களை ஒருங்கிணைத்த போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்காத வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

அதன்படி, சென்னை முதல் கன்னியாகுமரி வரை தமிழகம் முழுவதுமாக பெரும்பாலான பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி தமிழகம் முழுவதும் 97.7 சதவீத பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் தெரிவித்திருந்தார்.

மொத்தம் இயக்கப்பட வேண்டிய 15,226 பேருந்துகளில் 14,888 பேருந்துகள் இயக்கப்படுவதாக தெரிவித்த அவர், சேலம் பணிமனைகளில் இருந்து 775 பேருந்துகளும், கோவை பணிமனைகளில் இருந்து வழக்கமாக 1787 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன என தெரிவித்தார்.

அதே போல் சென்னையில் மாநகர பேருந்து 97.68 சதவீதம் பேருந்துகளும், விழுப்புரம் பணிமனைகளில் இருந்து 1779 பேருந்துகளில் 1763 பேருந்துகளும் இயக்கப்படுகிறது தெரிவித்தார்.

இதையும் படியுங்க : https://itamiltv.com/rs-1000-magalir-urimai-thogai-has-been-credited-in-advance-to-womens-bank-accounts/

இதனிடையே பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்துகள் சிறப்பு பேருந்துகளாக இயக்கப்படவுள்ளன.

அந்த பேருந்துகள் இயக்குவதற்கும் தமிழக அரசு முன்கூட்டியே தற்காலிக (Temporary) பேருந்து ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

https://x.com/ITamilTVNews/status/1744701150161760754?s=20

அவர்களுக்கு உடனடியாக ஓட்டுநர் பயிற்சி மற்றும் நடத்துனர் பயிற்சி சோதனை செய்யப்பட்டு அவர்களுக்கு பேருந்தில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயிற்சி பெற்றவர்கள் அசல் ஓட்டுனர் உரிமம், ஆதார் அட்டையுடன் போக்குவரத்து கழகத்தை அணுக அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Spread the love
Related Posts