Site icon itamiltv.com

மெட்ரோ முதல் மேகதாது வரை… மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கைகள் என்ன?

தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் இன்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசினார். சுமார் 10 நிமிடங்கள் நடைபெற்ற இந்த சந்திப்பில், தமிழகத்தின் வளர்ச்சி மற்றும் மக்கள் நலன் தொடர்பான பல முக்கிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக மெட்ரோ ரயில் திட்டத்திற்கு தேவையான நிதி, பிஎம் ஸ்ரீ கல்வித் திட்ட உதவி, ஜிஎஸ்டி நிலுவைத் தொகை, மத்திய அரசு திட்டங்களுக்கான மாநில நிதிப் பங்குகளை விரைந்து வழங்குதல் போன்ற விஷயங்கள் குறித்து முதலமைச்சர் விஜய் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. மேலும், மேகதாது அணை பிரச்சினை, தமிழக மீனவர்கள் கைது விவகாரம் மற்றும் விவசாயத்திற்குத் தேவையான யூரியா உரங்களை விரைவாக வழங்குவது பற்றியும் பிரதமரிடம் கோரிக்கை வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய மற்றும் மாநில அரசுகள் இணக்கமாக செயல்பட்டு மக்களுக்கு பயனுள்ள திட்டங்களை தடையின்றி செயல்படுத்த வேண்டும் என்றும் இந்த சந்திப்பில் பேசப்பட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா மற்றும் நிர்மலா சீதாராமனையும் முதலமைச்சர் விஜய் சந்திக்க உள்ளார்.

Exit mobile version