Site icon itamiltv.com

ரவி மோகன் – கெனிஷா உறவு முடிவா? ரசிகர்கள் மத்தியில் கேள்வி!

நடிகர் Ravi Mohan மற்றும் பாடகி Kenisha குறித்து சமூக வலைதளங்களில் புதிய சர்ச்சை எழுந்துள்ளது. கெனிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பதிவு இதற்குக் காரணமாகியுள்ளது.

ரவி மோகன் மற்றும் அவரது மனைவி Aarthi Ravi இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில மாதங்களாக இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் தாக்கல் செய்த விவாகரத்து மனு தற்போது நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

இந்த நிலையில், மனைவியிடமிருந்து பிரிந்த பிறகு ரவி மோகன் பல நிகழ்ச்சிகளில் கெனிஷாவுடன் கலந்து கொண்டதால், இருவருக்கும் நெருக்கம் அதிகரித்ததாக பேசப்பட்டது. அவர்கள் திருமணம் செய்து கொள்ளலாம் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.

ஆனால் சமீபத்தில் கெனிஷா தனது சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், தான் சென்னை நகரை விட்டு வெளியேறிவிட்டதாகவும், தனது வாழ்க்கையில் இருந்து பல விஷயங்களை விலக்கிக் கொள்ள முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தனக்கு தேவையான தனிமையை வழங்குமாறு நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதன் பின்னர், கெனிஷா மற்றும் ரவி மோகன் இருவரும் பிரிந்து விட்டதாக சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Exit mobile version