முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக டெல்லி சென்ற விஜய், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பயணத்தை முடித்து அவர் நேற்று சென்னை திரும்பினார்.
ஆனால், டெல்லி பயணத்தின் போது கூட்டணியில் உள்ள காங்கிரஸ் தலைவர்களான சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை விஜய் சந்திக்காதது அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாக மாறியது.
இதுகுறித்து விளக்கம் அளித்த காங்கிரஸ் எம்.பி. கிறிஸ்டோபர் திலக், விஜயின் டெல்லி பயணம் முழுவதும் அரசு தொடர்பான நிகழ்வுகளுக்காக மட்டுமே நடைபெற்றது என்று தெரிவித்தார். அதனால் காங்கிரஸ் தலைவர்களை சந்திக்கும் வாய்ப்பு அமையவில்லை என்றார்.
மேலும், காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தியும் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். ராகுல் காந்தியை சந்திக்க நேரம் ஒத்துவராததே காரணம் என்றும், இதில் எந்தவித அரசியல் பிரச்சனையும் இல்லை என்றும் அவர் கூறினார்.
அடுத்த மாதத்தில் முதலமைச்சர் விஜய், சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை நேரில் சந்திக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

