Site icon itamiltv.com

விவாகரத்து கேட்கும் விஜய் மனைவி..” பின்னணியில் அரசியல் சதி? – அதிரடி திருப்பம்!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரும், தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான ஜோசப் விஜய் மீது அவரது மனைவி சங்கீதா விஜய், செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளார். 1998-ல் லண்டனில் பதிவுத் திருமணமும், 1999-ல் சென்னையில் இந்து முறைப்படி சடங்குகளுடனும் இவர்களது திருமணம் நடைபெற்றது.

25 ஆண்டுகளாக இணைந்து வாழ்ந்த இந்த தம்பதியருக்கு ஜேசன் சஞ்சய் மற்றும் திவ்யா சாஷா ஆகிய இரண்டு பிள்ளைகள் உள்ளனர். ஆரம்ப காலங்களில் மகிழ்ச்சியாக இருந்த இவர்களது இல்லற வாழ்க்கையில், கடந்த 2021-ம் ஆண்டு முதல் விரிசல் ஏற்படத் தொடங்கியதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சங்கீதா புகார் பின்னணியில் அரசியல் சதி?

விஜய் மனைவி விஜய் நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டிருக்கும் நிலையில், இந்த வழக்கு தொடர்பாக பல்வேறு பகீர் தகவல்கள் வெளியாகி வருகிறது. அண்மையில் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் நடிகரும் தவெக தலைவருமான விஜய் அவர்கள் குறித்து நடிகை த்ரிஷாவோடு தொடர்பு படுத்தி பேசியிருந்தார். ஒரு அரசியல் கட்சியின் தலைவரின் தனிப்பட்ட விவகாரத்தில், அவதூறு பரப்புவதாக மிகப்பெரும் அதிர்வலைகளையும், எதிர்ப்பையும் சம்பாதித்த நிலையில், அந்த கருத்துக்கு நயினார் நாகேந்திரன் வருத்தம் தெரிவித்திருந்தார்.

த்ரிஷாவும் இது தொடர்பாக தனது கண்டனத்தை பதிவு செய்திருந்தார்.

இந்த நிலையில், விஜயின் மனைவி சங்கீதாவின் விவாகரத்து மனுவின் பின்னணியில் அரசியல் சதி இருக்கலாம் என சந்தேகங்கள் வலுக்கிறது..தேர்தல் நெருங்கும் நேரத்தில் தவெக தலைவர் விஜயின் பெயருக்கு களங்கம் கற்பிப்பதற்காக தனிப்பட்ட குடும்ப பிரச்சனையை அரசியலாக்க பாஜகவும், திமுகவும் சதி செய்வதாக அவரது ஆதரவாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

ஒரு புகாரின் அடிப்படையில் மட்டுமே உண்மை இதுவென்று முடிவுக்கு வரமுடியாது என்கிற பட்சத்தில், இதனை சட்ட ரீதியாக எதிர்கொள்ள தவெக தலைவர் விஜய் தரப்பு தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

Exit mobile version