ஹாய் மாயா : நல்லா இருப்பனு தெரியும்.. பிரதீப் ட்வீட்..
கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி இதுவரை 6 சீசன்களை கடந்து இப்போது 7 வது சீசனும் முடிந்துள்ளது.
இந்த நிகழ்ச்சியை முன்னணி நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பிராந்திய மொழிகளிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.
இந்நிலையில் கடந்த அக்டோபர் 1-ம் தேதி தொடங்கிய பிக்பாஸ் 7-வது சீசனில் பிக்பாஸ், ஸ்மால் பாஸ் என 2 வீடுகள் உருவாக்கப்பட்டது.
பிக்பாஸ் வீட்டிற்குள் முதல் போட்டியாளராக கூல் சுரேஷ் நுழைந்தார்.
அவரைத் தொடர்ந்து பூர்ணிமா ரவி, ரவீனா தஹா, பிரதீப் ஆண்டனி, நிக்ஸன், வினுஷா தேவி, மணிசந்திரா, அக்ஷயா உதயகுமார், ஜோவிகா விஜயகுமார்,
ஐஷு, விஷ்ணு விஜய், மாயா கிருஷ்ணன், சரவண விக்ரம், யுகேந்திரன், விசித்ரா, பவா செல்லதுரை, அனன்யா ராவ், விஜய் வர்மா என 18 போட்டியாளர்கள் உள்ளே அனுப்பப்பட்டனர்.
இதில், முதல் வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து அனன்யா ராவ் வெளியேற்றப்பட்ட நிலையில், அவரைத் தொடர்ந்து இரண்டாவது வாரம் பவா செல்லதுரை தாமாக முன்வந்து பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறுவதாக கூறி வெளியே சென்றுவிட்டார்.
பின்னர் மூன்றாவது வாரம் விஜய் வர்மா எவிக்ட் செய்யப்பட்ட நிலையில், அவரைத் தொடர்ந்து நான்காவது வாரம் யுகேந்திரன் மற்றும் வினுஷா என வீட்டிலிருந்து இரண்டு பேர் எவிக்ட் செய்யப்பட்டனர்.
இந்நிலையில் 5-வது வாரம் பிரதீப்பிற்கு ரெட் கார்டு கொடுத்த நிலையில், அன்ன பாரதி எவிக்ட் செய்யப்பட்டார்.
பின்னர், கடந்த அக்டோபர் மாதம் 29-ம் தேதி வைல்கார்ட் என்ட்ரியாக சீரியல் நடிகர்கள் அர்சனா, தினேஷ், கானா பாடகர் பாலா, ஆர்.ஜே.பிராவோ, பட்டிமன்ற பேச்சாளரான அன்ன பாரதி என 5 பேர் பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பப்பட்டனர்.
மீண்டும் கடந்த 26-ம் தேதி விஜய் வர்மா மற்றும் அனன்யா ராவ் வைல்கார்ட் என்ட்ரியாக உள்ளே அனுப்பப்பட்டனர்.
ஆறாவது வாரம் ஐஷூவும் ஏழாவது வாரம் கானா பாலாவும் எட்டாவது வாரம் ஆர்.ஜே. பிராவோ மற்றும் அக்ஷயா என பிக்பாஸ் வீட்டிலிருந்து 2 பேர் எவிக்ட் செய்யப்பட்டு வெளியேற்றபட்டனர்.
பின்னர் ஒன்பதாவது வாரம் ஜோவிகா எவிக்ட் செய்யப்பட்டார்.
தொடர்ந்து பத்தாவது வாரம் மிக்ஜாங் புயல் கார்ணமாக ஓட்டிங் சரியாக நடிபெறவில்லை என்ற காரணத்தினால் நோ எவிக்ஷன் என்று பிக்பாஸ் குழு அறிவித்தது.
இந்நிலையில் கடந்த 11-வது வாரம் பிக்பாஸ் வீட்டில் யாரும் எதிர்பார்க்காத விதமாக மிட்வீக் எவிக்ஷன் நடைபெற்றது. இதில் குறைவான வாக்குகளை பெற்ற அனன்யா மீண்டும் வீட்டில் இருந்து வெளியேற்றப்பற்றார்.
அதனைத் தொடர்ந்து அந்த வார இறுதியில் கூல் சுரேஷூம், அவரைத் தொடர்ந்து கடந்த 12-வது வாரம் சரவண விக்ரம் வெளியேற்றப்பட்டார்.
13-வது வாரம் டபுள் எவிஷன் நடைபெற்ற நிலையில் ரவீனா மற்றும் நிக்சன் ஆகியோர் வெளியேற்றப்பட்டனர்.
கடந்த வாரம் நடைபெற்ற பணப்பெட்டி டாஸ்கில் பூர்ணிமா 16 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார்.
https://x.com/ITamilTVNews/status/1747491783427408103?s=20
அவரைத் தொடர்ந்து கடந்த வார ஞாயிறு அன்று விசித்திரா பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். அவரை தொடர்ந்து மிட் வீக் எவிக்ஷன் மூலம் விஜய் வர்மா வெளியேற்றப்பட்டார்.
இந்நிலையில் பிக்பாஸ் தமிழ் சீசன் 7-ல் இறுதிப் போட்டியாளர்களாக விஷ்ணு விஜய், தினேஷ், மணி, அர்ச்சனா மற்றும் மாயா ஆகிய 5 பேர் இருந்தனர்.
நேற்று நடந்த ஃபைனல்ஸ்-ல் அர்ச்சனா டைட்டில் வெற்றிபெற்றார். இரண்டாம் இடத்தை மணியும், மூன்றாவது இடத்தை மாயாவும் பெற்றனர்.
தற்போது நிகழ்ச்சி முடிந்து இருக்கும் நிலையில், பிரதீப் ஆண்டனி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில்,
“ஹாய் மாயா, லைப்லாம் எப்படி போகுது? நீ நல்லா இருப்பனு தெரியும். என்னுடைய நட்பின் மதிப்பு 50 லட்சம். நான் அவ்வளோலாம் வொர்த் இல்லனு நீ நினைச்சா.
நான் புரிஞ்சிக்கிறேன். உன்னோட விளையாண்டது நல்லா இருந்துச்சு. செக் மேட்” என அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.