Site icon itamiltv.com

தவெகவுக்கு பெரும்பான்மை இல்ல..ஆட்சி அமைக்க முடியாது – ஆளுநர் மாளிகை!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று மாநிலத்தின் மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது.

ஆனால், திருச்சி கிழக்கு தொகுதியை விஜய் ராஜினாமா செய்ய உள்ளதால், சபாநாயகர் பதவியை தவிர்த்து கட்சியின் பலம் 106 ஆக குறைகிறது.

ஆட்சி அமைக்க தேவையான 118 உறுப்பினர்களை எட்ட இன்னும் 11 பேரின் ஆதரவு தேவைப்படும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் 5 எம்எல்ஏக்கள் ஆதரவு அளித்த பிறகும் தவெகவுக்கு மேலும் 6 உறுப்பினர்களின் ஆதரவு அவசியமாகியுள்ளது.

இந்த சூழலில், தவெக தலைவர் விஜய் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினர்.

ஆனால், 112 உறுப்பினர்களின் ஆதரவு பட்டியல் மட்டுமே வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், மீதமுள்ள ஆதரவு குறித்து தெளிவான விளக்கம் அளிக்குமாறு ஆளுநர் கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, இரண்டாவது நாளாகவும் விஜய் ஆளுநரை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இருப்பினும், பெரும்பான்மையை எவ்வாறு நிரூபிப்பீர்கள் என்ற கேள்விக்கு அளிக்கப்பட்ட விளக்கம் திருப்திகரமாக இல்லை என கூறப்படுகிறது.

பின்னர் வெளியிடப்பட்ட விளக்கத்தில், தவெகவுக்கு ஆட்சியமைக்க தேவையான முழு எம்எல்ஏ ஆதரவு இன்னும் இல்லை என ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.

Exit mobile version