ஓரினச்சேர்க்கையில் ஆர்வம் கொண்ட சரூப் என்ற நபர் 18 மாதங்களில் 11 பேரை கொடூரமாக கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
18 மாதங்களில் 11 பேரை கொலை செய்து செங்கல் சைக்கோவாக சுற்றி வந்த பஞ்சாபை சேர்ந்த ராம் சரூப் என்ற சோதியை ஹோஷியார்பூரில் போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் 18 அன்று, கிராத்பூர் சாஹிப் பகுதியில் உள்ள மணலி சாலையில் ஒரு சடலம் கண்டெடுக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
Also Read : இன்று விண்ணில் பாய்கிறது PSLV C60 ராக்கெட்..!!
ஓரினச்சேர்க்கையில் அதீத ஆர்வம் கொண்ட சரூப் பைக்கில் சவாரி செய்வதன் மூலம் அல்லது உடலுறவு கொள்வதன் மூலம் அவர் அடிக்கடி சந்திக்கும் ஆண்களைக் கொடூரமாக கொன்று வந்துள்ளார். இந்நிலையில் சரூப் இதுவரை 11 பேரை மட்டும் தான் கொன்றுள்ளாரா இல்லை இன்னும் வேறு யாரும் இவரால் பாதிக்கப்பட்டுள்ளார்களா என்ற கோணத்தில் போலீசார் தற்போது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சரூப் திருமணமாகி மூன்று குழந்தைகளின் தந்தை. ஓரினச்சேர்க்கையில் அவருக்கு இருந்த ஆர்வத்தை உணர்ந்த சரூப்பின் குடும்பத்தினர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவரை கைவிட்டனர். தற்போது அவர் ரிமாண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில் அவருக்கு எச்.ஐ.வி பரிசோதனை நடத்த போலீசார் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது