இந்தியாவில், கடந்த 3 ஆண்டுகளாக போதைப் பொருள் கடத்தல் பற்றி தகவல் தெரிவித்த 970 பேருக்கு குஜராத் அரசு ₹11 கோடிக்கு மேல் பரிசு வழங்கியுள்ளது.
இந்தியாவில் போதை பொருள் புழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் போதை பொருளையும் போதை பொருள் கடத்தல் கும்பலையும் ஒழிக்க அணைத்து மாநில போலீசாரும் தீவிர கண்காணிப்பு மற்றும் கடுமையான தேடுதல் வேட்டைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
என்னதான் ஒருபக்க போலீசார் கிடைக்குப்பிடி பிடித்தாலும் அனைவரது கண்ணிலும் மண்ணை தூவி போதைப்பொருள் விற்பனை நாட்டின் பெருமபாலான பகுதிகளில் பரபரப்பாக நடைபெறு வருகிறது.
Also Read : நீட் தேர்வு விவகாரத்தில் மக்களை ஏமாற்றும் திமுக அரசு – தவெக தலைவர் விஜய் சாடல்..!!
இந்நிலையில் போதை பொருள் குறித்து தகவல் கொடுத்தால் ரொக்கப்பரிசு வழங்கப்படும் என குஜராத் காவல்துறை அறிவித்திருந்த நிலையில் கடந்த 3 ஆண்டுகளில் அம்மாநிலத்தில் மட்டும் பலகோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது.
இதையடுத்து தற்போது போதைப் பொருள் வழக்குகளில் அலுவலக பணிகளில் உதவியாக இருக்கும் தனிநபருக்கு ஒரு பறிமுதலுக்கு ₹2,500 பரிசு வழங்கப்படுகிறது.
போதைப் பொருள் கடத்தல் பற்றி தகவல் தெரிவிப்பவர்களுக்கு, பறிமுதல் செய்யப்படும் போதைப் பொருளின் மதிப்பில் 20% பரிசாக வழங்கும் திட்டத்தை குஜராத் அரசு அமல் படுத்திய நிலையில் இத்திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் இதன் மூலம் கடந்த 3 ஆண்டுகளாக போதைப் பொருள் கடத்தல் பற்றி தகவல் தெரிவித்த 970 பேருக்கு குஜராத் அரசு 11 கோடிக்கு மேல் பரிசு வழங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது .