தமிழ்நாட்டில் 31 நாட்களில் 133 படுகொலைகள் நடைபெற்றுள்ளன. செல்வாக்கு பெற்ற மாநில தலைவருக்கே பாதுகாப்பு இல்லையென்றால், சாதாரண மக்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு சீமான் இன்று நேரில் அஞ்சலி செலுத்தினார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய சீமான் கூறியதாவது :
தமிழ்நாட்டில் 31 நாட்களில் 133 படுகொலைகள் நடைபெற்றுள்ளன. செல்வாக்கு பெற்ற மாநில தலைவருக்கே பாதுகாப்பு இல்லையென்றால், சாதாரண மக்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது.
ஆம்ஸ்ட்ராங் முன் வைத்த தத்துவம் மரணித்து போகாது. சரண் அடைந்தவர்களை விசாரித்து ஏன் எதற்காக கொலை செய்தார்கள் எனக் கண்டறிந்தார்களா? குற்றவாளிகள் சரண் அடைந்தார்களா? கைது செய்யப்பட்டார்களா.
எங்கள் மாநிலத்திலேயே ஆகச்சிறந்த காவல்துறை, உளவுத்துறை உள்ளது. எங்கள் மண்ணின் மைந்தன் மரணத்தை எங்கள் மாநில காவல்துறையே கண்டுபிடிப்பதுதான் சரியானது என சீமான் தெரிவித்துள்ளார்.