சீனாவில் பொய்யான மாப்பிள்ளையை காட்டி 14 கோடியை அபேஸ் செய்த பெண்ணுக்கு நீதிமன்றம் கடும் தண்டனை வழங்கியுள்ளது.
சீனாவில் பணக்கார மாப்பிள்ளையை திருமணம் செய்வதாக ஊரை நம்பவைத்து, தனது உறவினர்களிடம் இருந்து சுமார் 14 கோடி வரை ஏமாற்றிய 40 வயது பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.
Also Read : கம் பேக்னா இப்படி தான் இருக்கனும் – சச்சின் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா..!!
அந்த பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது வீட்டில் திருமணத்திற்கு வற்புறுத்தியதால் ஓட்டுநரை மணமகனாக நடிக்க வைத்ததாகவும் . அவர் நாட்டிலேயே மிகப்பெரிய கட்டட தொழிலில் உள்ளதாகவும், குறைந்த விலையில் வீடுகளை வாங்கித்தருவதாகவும் கூறி பல கோடியை அந்த பெண் சுருட்டிய சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இதையடுத்து அந்த பெண்ணை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில் அப்பெண்ணுக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.