Site icon ITamilTv

வார இறுதி நாட்களை முன்னிட்டு 1,460 சிறப்பு பேருந்துகள் இயக்கம்..!!

tn special buses

tn special buses

Spread the love

வார இறுதி நாட்கள் மற்றும் முகூர்த்த தினத்தை முன்னிட்டு சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ( tn special buses ) இருந்து 1,460 சிறப்பு பேருந்துகள் இயக்க பட உள்ளதாக தமிழ்நாடு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆர்.மோகன் வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :

எதிர்வரும் 25, 26 ஆம் தேதிகள் வார இறுதி நாட்கள் (சனி, ஞாயிறு – முகூர்த்த தினம்) என்பதால் சென்னையில் இருந்தும், தமிழகத்தின் பல்வேறு முக்கிய இடங்களில் இருந்தும் ஏராளமானோர் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை கருத்தில் கொண்டு அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் நாள்தோறும் இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Also Read : வாகன பிரியர்களின் கவனத்திற்கு – இனி டிரைவிங் லைசென்ஸ் எடுக்க ஆர்.டி.ஓ., ஆபிஸ் செல்ல வேண்டாம்..!!

அதன்படி, சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு இன்றும், நாளையும் (ஏப்.24, 25) 1,130 பேருந்துகள் மற்றும் சென்னை, கோயம்பேட்டில் இருந்து நாகப்பட்டினம், வேளாங்கண்ணி,ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 130 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

பெங்களூரு, திருப்பூர், ஈரோடு, கோயம்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து பிற பகுதிகளுக்கு 200 சிறப்பு பேருந்துகள்என மொத்தமாக 1,460 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இப்பேருந்துகளில் www.tnstc.in என்ற இணையதளம் மற்றும் tnstc செயலி மூலமாகவும் முன்பதிவு செய்து பயணிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

சிறப்பு பேருந்து இயக்கத்தை கண்காணிக்க குறிப்பிட்ட பேருந்து நிலையங்களில் ( tn special buses ) அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Spread the love
Exit mobile version