கென்யாவில் பள்ளி விடுதி ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 17 மாணவர்கள் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள கென்யா நாட்டின் நெய்ரி நகரில் ஹில்சைட் எண்டர்சா என்ற பள்ளிக்கூடம் செயல்பட்டு வருகிறது.
இந்த பள்ளிக்கூடத்தில் நூற்றுக்கணக்கான மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வரும் சூழலில், இப்பள்ளியில் தங்கிப்படிக்கும் வகையில் மாணவர் விடுதியும் செயல்பட்டு வந்தது. இந்த விடுதியில் பல மாணவர்கள் தங்கி கல்வி பயின்று வருகின்றனர்.
இதையும் படிங்க : September 06 Gold Rate : தங்கம் விலை அதிரடி உயர்வு!!
இந்நிலையில், மாணவர்கள் தங்கும் விடுதியில் நேற்று இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த கோர விபத்தில் சிக்கி 17 மாணவர்கள் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும், 13 மாணவர்கள் பலத்த தீக்காயம் அடைந்த நிலையில் மீட்கப்பட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்து விரைந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் பள்ளி விடுதியில் பற்றி எரிந்த தீயை அணைத்து காயமடைந்த மாணவர்களை மீட்டனர்.
மீட்கப்பட்ட மாணவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே, இந்த தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.