இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை தந்த முதியவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி திருவில்லிபுத்தூர் போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே சுந்தரராஜபுரத்தை சேர்ந்தவர் தங்கச்சாமி (61). சத்துணவு அமைப்பாளராக பணி புரிந்த இவர், கடந்த 22.7.2015 அன்று 9 வயதுடைய இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து சேத்தூர் போலீசார் வழக்கு பதிந்து தங்கச்சாமியை கைது செய்தனர்.
இதுதொடர்பான வழக்கு திருவில்லிபுத்தூர் மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்றது. இவ்வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி தனசேகரன், தங்கச்சாமிக்கு ஆயுள் தண்டனை விதித்தார். மேலும் 2 சிறுமிகளுக்கு தமிழக அரசு தலா ரூ.10 லட்சம் வழங்க பரிந்துரை செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.