வயநாட்டில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஏராளமானோர் காயமடைந்துள்ள நிலையில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
கேரளா மாநிலம் முழுவதும் தற்போது கனமழை பெய்து வரும் நிலையில் பல இடங்களில் மலையாற்று வெள்ளமும் நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது .
இந்நிலையில் இந்த தொடர் மழையால் வயநாடு மாவட்டம் முண்டக்கை என்ற இடத்தில் நள்ளிரவு 1 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது .
Also Read : மேட்டூர் அணையிலிருந்து பாதி அளவே தண்ணீர் திறப்பு – அண்ணாமலை காட்டம்
தகவல் அறிந்து அங்கு சென்ற மீட்பு குழு நிலைமையில் சீரமைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த நிலையில் அதிகாலை 4 மணிக்கு சுமார் 2 கி.மீ தொலைவில் சூரல்மலை என்ற இடத்தில் 2வது நிலச்சரிவு எற்பட்டது.
வயநாடு பகுதியில் அடுத்தடுத்து ஏற்பட்ட இந்த நிலச்சரிவில் 7 பேர் இதுவரை உயிரிழந்துள்ள நிலையில் 30க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது .
இந்த துயர சம்பவத்தில் 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் நிலச்சரிவில் சிக்கியுள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது.