Site icon ITamilTv

பிறந்த குழந்தை.. பிழைப்பதற்கு 20% தான் வாய்ப்பு.. -பச்சிளம் குழந்தை உயிரை காப்பாற்றி அசத்திய மருத்துவர்கள்! #america

Spread the love

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் நுரையீரல் குறைபாட்டுடன் பிறந்த பெண் குழந்தைக்கு மருத்துவ குழுவினர் அறுவை சிகிச்சை மேற்கொண்ட நிலையில், அந்தக் குழந்தை குணமடைந்துள்ளது.

கார்லா-ஜோசுவா தம்பதியரின் இரட்டை பெண் குழந்தைகளில் சார்லோட் எனப் பெயரிடப்பட்ட குழந்தை, ஒரு நுரையீரலுடன் மட்டுமே பிறந்தது. சார்லோட்டின் மற்றொரு நுரையீரல் அந்தக் குறைபாட்டை சரிசெய்ததால், ஆக்ஸிஜனேற்றம் முழு அளவில் இருந்தது.

உடல் நலனில் எந்த ‘கோளாறும் இல்லாமல் ஆரோக்கியமாக இருந்த நிலையில், திடீரென சுவாசக் கோளாறு காரணமாக ‘மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சார்லோட், பிழைப்பதற்கு 20 சதவீத வாய்ப்பை மட்டுமே கொண்டிருந்தது.

இதனால், தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு தொடர்ந்து 6 மாதங்கள் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அந்தக் குழந்தை நலம் பெற்று தனது குடும்பத்துடன் வீடு திரும்பியது.


Spread the love
Exit mobile version