பாலியல் வழக்கில் சிக்கி 20 வருடங்கள் சிறை தண்டனை பெற்ற குர்மீத் ராம் ரஹிம் சிங்கிற்கு மீண்டும் பரோல் வழங்க பட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
தேரா சச்சா சௌதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹிம் சிங் பெண் சீடர்களை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 20 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று சிறைவாசம் அனுபவித்து வருகிறார் .
இதற்கிடையே பல்வேறு காரங்களை சுட்டிக்காட்டி பலமுறை பரோல் பெற்றுள்ள குர்மீத் ராம் ரஹிம் சிங் மீண்டும் பரோல் கோரி விண்ணப்பித்த நிலையில் அவருக்கு மீண்டும் பரோல் வழங்கப்பட்டுள்ளது .
Also Read : பள்ளி பாடப் புத்தகங்களின் விலை உயர்வு..!!
பெற்ற தேரா சச்சா சௌதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹிம் சிங்கிற்கு மீண்டும் 21 நாட்கள் பரோல் வழங்கப்பட்டுள்ளது!
கடந்த 4 ஆண்டுகளில் 10 முறை பரோல் வழங்கப்பட்டு 261 நாட்கள் சிறைக்கு வெளியே இருந்துள்ள குர்மீத்துக்கு மீண்டும் 21 நாட்கள் பரோல் வழங்கப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
நீதிமன்றத்தின் அனுமதியின்றி பாலியல் குற்றவாளியான குர்மீத்துக்கு பரோல் வழங்கக்கூடாது என ஹரியானா சிறை துறைக்கு கடந்த பிப்ரவரி மாதம் அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.