மேஷம் முதல் மீனம் வரை இன்றைய ராசி பலன் (2024 February 5)
மேஷம் :
வெளியூரில் இருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். புதிய முயற்சிகள் வெற்றி தரும். வியாபாரத்தில் விற்பனை அதிகரிக்கும். நண்பர்களுக்காக உதவி செய்து மகிழும் வாய்ப்பு ஏற்படும்.
அம்பிகையை வழிபாடு நன்மை தரும்.
ரிஷபம் :
இன்று தொடங்கும் எந்த காரியங்களிலும் தெய்வ அனுகூலம் கிடைக்கும். வாழ்க்கைத்துணைவழி உறவுகளிடம் எதிர்பார்த்த காரியம் நிறைவேறும். வியாபாரத்தில் விற்பனை எதிர்பார்த்தபடியே இருக்கும்.
மகாவிஷ்ணு வழிபாடு நன்மை தரும்.
இதையும் படிங்க : பிப்ரவரி 5 : தங்கம் விலை குறைந்தது!!
மிதுனம் :
எதிர்பாராத பண வரவுக்கு வாய்ப்பு உண்டு. வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டு. அரசாங்க வகையில் நினைத்த காரியம் அனுகூலமாக முடியும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் உற்சாகம் தரும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.
விநாயகர் வழிபாடு நன்மை தரும்.
கடகம் :
மிகவும் உற்சாகமாக செயல்படும் நாளாக அமையும். உறவினர்கள் மூலம் சுபநிகழ்ச்சிக் கான பேச்சுவார்த்தை நல்லபடியாக முடியும். எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்தபடியே லாபமும் கூடுதலாகக் கிடைக்கும்.
தட்சிணாமூர்த்தி வழிபாடு நன்மை தரும்.
சிம்மம் :
எதிர்பார்த்த உதவி கிடைக்கும். உறவினர்கள் மூலம் கிடைக்கும் தகவல் மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்த படியே இருக்கும். நண்பர்கள் வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.
துர்கையை வழிபாடு நன்மை தரும்.
கன்னி :
குடும்பத்தில் முக்கிய முடிவு எடுப்பதில் பெரியவர்களின் ஆலோசனை அவசியம். தந்தையுடன் அனுசரணையாக நடந்துகொள்வது நல்லது. வியாபாரத்தில் விற்பனை வழக்கம் போலவே இருக்கும்.
சிவபெருமான் வழிபாடு நன்மை தரும்.
துலாம் :
மிகவும் உற்சாகமான நாள். எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். அலுவலகத்தில் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெறும்.
லட்சுமி நரசிம்மர் வழிபாடு நன்மை தரும்.
விருச்சிகம் :
இன்று எதிர்பாராத பண வரவுக்கு வாய்ப்பு உண்டு. கணவன் – மனைவிக்கிடையே அந்யோன்யம் அதிகரிக்கும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும்.
முருகப்பெருமான் வழிபாடு நன்மை தரும்.
தனுசு :
அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுடன் அனுசரணையாக நடந்துகொள்வது நல்லது. வாழ்க்கைத் துணையால் மகிழ்ச்சி ஏற்படும். வியாபாரத்தில் சற்று முன்னேற்றமான சூழ்நிலை ஏற்படும்.
ஆஞ்சநேயர் வழிபாடு நன்மை தரும்.
மகரம் :
உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த காரியம் நிறைவேறும். வாழ்க்கைத் துணைவழி உறவுகளுக்காக செலவு செய்ய வேண்டி வரும். வியாபாரம் வழக்கம் போலவே இருக்கும்.
சிவபெருமான் வழிபாடு நன்மை தரும்.
கும்பம் :
திட்டமிட்டு செயல்படுவது மிகவும் அவசியம். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுக்க உகந்த நாள். உடல் நலனில் கவனம் தேவை. வியாபாரம் வழக்கம் போலவே இருக்கும்.
குலதெய்வ வழிபாடு நன்மை தரும்.
இதையும் படிங்க : தருமபுரியில் இபிஎஸ் பேனர்கள் கிழிப்பு!
மீனம் :
எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும். கணவன் – மனைவிக் கிடையே கருத்து வேறுபாடு நீங்கி அந்யோன்யம் அதிகரிக்கும். வியாபாரம் சுமாராக இருக்கும்.
விநாயகர் வழிபாடு நன்மை தரும் (2024 February 5).