மேஷம் முதல் மீனம் வரை இன்றைய ராசி பலன் (2024 March 22)
மேஷம் :
மேஷ ராசி நேயர்களே இன்று வெளியூர் பயணங்களின் மூலம் நல்ல ஆதாயம் அடைவீர்கள். குழந்தைகள் கல்விப் பணியில் நல்ல முன்னேற்றம் அடைவார்கள். பூர்வீக சொத்துகளை கையகப்படுத்துவீர்கள். வியாபாரத்தில் முன்னேற்றம் காண்பீர்கள். உறவினர்கள் வருகை மனமகிழ்ச்சி தரும்.
சிவபெருமான் வழிபாடு நன்மை தரும்.
அதிர்ஷ்ட எண் : 7
நிறம் : பச்சை
ரிஷபம் :
ரிஷப ராசி நேயர்களே இன்று குடும்பத்தினரின் தேவைகளை மகிழ்ச்சியுடன் நிறைவேற்றுவீர்கள். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. சகோதரர்களுடன் மனவருத்தம் ஏற்படக்கூடும். பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் அனுசரணையாக நடந்துகொள்ளவும்.
மகாலட்சுமி வழிபாடு மகிழ்ச்சி தரும்.
அதிர்ஷ்ட எண் : 4
நிறம் : மஞ்சள்
மிதுனம் :
மிதுன ராசி நேயர்களே இன்று எதிர்பார்த்த வங்கிக் கடன்களை தடையின்றி பெறுவீர்கள். அரசாங்கத்தின் மூலமாக புதிய ஒப்பந்தங்கள் உண்டாக்கும். நரம்பு சம்பந்தப்பட்ட வியாதிகள் குணமாகும். வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். சிறு வியாபாரிகள் நல்ல லாபம் அடைவீர்கள்.
குலதெய்வ வழிபாடு நன்மை தரும்.
அதிர்ஷ்ட எண் : 3
நிறம் : அடர்நீலம்
கடகம் :
கடக ராசி நேயர்களே இன்று புதிய முயற்சிகளை தொடங்குவது சாதகமாக முடியும். உறவினர்கள் மூலம் சுபநிகழ்ச்சி ஒன்று ஏற்பாடாகும். சோர்வு நீங்கி உற்சாகம் பெறுவீர்கள். வெளியில் செல்லும் போது தக்க முன்னெச்சரிக்கை அவசியம். வியாபாரத்தில் லாபம் எதிர்பார்த்ததைப் போலவே இருப்பது மகிழ்ச்சி தரும்.
நரசிம்மர் வழிபாடு நன்மை தரும்.
அதிர்ஷ்ட எண் : 7
நிறம் : ஆரஞ்சு
சிம்மம் :
சிம்ம ராசி நேயர்களே இன்று சகோதர உறவுகளால் மன சஞ்சலம் ஏற்படலாம். வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். வயிற்றுக் கோளாறு ஏற்பட்டு மருந்து சாப்பிடுவீர்கள். வாகனத்தை நன்றாக பூட்டி விட்டுச் செல்ல மறக்காதீர்கள். கால்நடை வளர்ப்பிலும் கோழிப்பண்ணையிலும் மிகச் சிறந்த லாபம் பார்ப்பீர்கள்.
அம்பிகை வழிபாடு நன்மைகளை அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட எண் : 7
நிறம் : அடர்சிவப்பு
கன்னி :
கன்னி ராசி நேயர்களே இன்று பயிர்த் தொழிலை பக்குவமாக செய்வீர்கள். விவசாயிகள் நல்ல மகசூல் பெறுவீர்கள். வணிகர்கள் கடல் கடந்து தொழில் செய்வதில் உள்ள இடையூறுகளை நீக்குவீர்கள். புதிய தொழில் தொடங்க ஆயத்தமாவீர்கள். பிள்ளைகள் நலனிலும் வளர்ச்சியிலும் கூடுதல் அக்கறை செலுத்துவீர்கள்.
விநாயகர் வழிபாடு நன்மை தரும்.
அதிர்ஷ்ட எண் : 3
நிறம் : மெரூன்
துலாம் :
துலாம் ராசி நேயர்களே இன்று எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உள்ளது. கடன்கள் விஷயத்தில் கவனம் தேவை. உறவினர்களால் குடும்பத்தில் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் புதிய முதலீடு விஷயத்தில் சிந்தித்துச் செயல்படவும்.உணவு விஷயத்தில் கவனமாக இருப்பது அவசியம்.
மஹாவிஷ்ணு வழிபாடு நன்மை தரும்.
அதிர்ஷ்ட எண் : 8
நிறம் : காவிநிறம்
விருச்சிகம் :
விருச்சிக ராசி நேயர்களே இன்று காரி தடை ஏற்படுவதால் மனச்சோர்வு அடைவீர்கள். கடன் காரணமாக சொத்துக்களை விற்றவர்கள் புதிய சொத்துக்கள் வாங்குவீர்கள். விளம்பரத்தை நம்பி தொழிலில் இழப்பை எதிர்கொள்வீர்கள். கவனக்குறைவாக வாகனம் ஓட்டுவதால் சிலர் விபத்துக்களில் சிக்குவீர்கள். கவனமுடன் சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.
காமாட்சி அம்மனை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட எண் : 9
நிறம் : பழுப்பு நிறம்
தனுசு :
தனுசு ராசி நேயர்களே இன்று நம்பியவர்கள் கைவிட்டதால் ஏமாற்றம் அடைவீர்கள். பணியிடங்களில் வீண் பழியை ஏற்க நேரிடும். டீக்கடையில் அமர்ந்து கொண்டு தேவையற்ற விவாதங்களை செய்யாதீர்கள். வியாபாரத்தில் ஏற்ற இறக்கமான நிலையால் தடுமாற்றம் அடைவீர்கள். பங்கு சந்தையில் பக்குவமாக முதலீடு செய்வீர்கள்.
முருகப்பெருமான் வழிபாடு வழிபாடு நன்மை தரும்.
அதிர்ஷ்ட எண் : 8
நிறம் : மஞ்சள்
மகரம் :
மகர ராசி நேயர்களே இன்று சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். திடீர் பணவரவுக்கு வாய்ப்பு ஏற்படும். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும். கொடுத்த கடன் திரும்பக் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். வியாபாரத்தில் விற்பனை சற்று மந்தமாகத்தான் இருக்கும்.
நடராஜப் பெருமானை வழிபடுவது நன்று.
அதிர்ஷ்ட எண் : 3
நிறம் : ஊதா
கும்பம் :
கும்ப ராசி நேயர்களே இன்று தாறுமாறாக பணப்புழக்கம் அதிகரித்து மகிழ்ச்சியில் திளைப்பீர்கள். எதிர்பார்த்ததைவிட தொழிலில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். அரசு மற்றும் தனியார் பணியாளர்கள் பதவி உயர்வு பெறுவீர்கள். காதலியின் உதவியால் முக்கிய கடனை அடைப்பீர்கள்.
மீனாட்சி அம்மன் வழிபாடு நன்மை தரும்.
அதிர்ஷ்ட எண் : 7
நிறம் : வெள்ளை
மீனம் :
மீன ராசி நேயர்களே இன்று நீண்ட நாட்களாக இருந்த பிரச்சனைகளிலிருந்து விடுபட்டு பிரகாசமாக இருப்பீர்கள். குடும்பத்தில் இருந்த சங்கடங்களை ஒவ்வொன்றாக விலக்குவீர்கள். தொழிலில் செய்த முதலீட்டால் பல மடங்கு லாபத்தை காண்பீர்கள்.
குலதெய்வ வழிபட நன்மைகள் ஏற்படும் (2024 March 22).
அதிர்ஷ்ட எண் : 4
நிறம் : இளம்பச்சை
இதையும் படிங்க : “சோதனை தீரவில்லே..” – அரெஸ்ட் ஆகிறாரா விஜயபாஸ்கர்?