ஹெலன் சூறாவளி புயலால் புளோரிடா, ஜார்ஜியா மற்றும் கரோலினா பகுதிகளில் மின்சாரம் இன்றி 30 லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் பாதிக்கப்பட்டன.
அமெரிக்காவில் ஹெலன் சூறாவளி புயல் கடந்த வியாழக்கிழமை பலவீனமடைந்த பின்னர், புளோரிடா பகுதியில் சூறாவளி கரையை கடந்தது.
இதனால், பல்வேறு இடங்களில் கனமழை மற்றும் வெள்ளம் ஏற்பட்டு அமெரிக்காவின் தென்கிழக்கு பகுதி மற்றும் புளோரிடா மாகாணம் முழுவதும் பெரிய அளவில் அழிவை ஏற்படுத்தி சென்றது.
சூறாவளியின் போது மணிக்கு 225 கி.மீ. வேகத்தில் காற்று வீசியதால், பல வீடுகள் சூறாவளியால் சேதமடைந்து 11 பேர் உயிரிழந்து உள்ளனர். இதில் மீட்பு பணியில் இருந்த தீயணைப்பு வீரர் ஒருவரும் அடங்குவார்.
புயலில் சிக்கி புளோரிடாவை சேர்ந்த 7 பேர், தெற்கு கரோலினாவில் 6 பேரும், வடக்கு கரோலினாவில் ஒருவரும் சேர்த்து 26 பேர் உயிரிழந்து உள்ளனர். வடக்கு கரோலினாவில் 4 பேர் காயம் அடைந்தனர். மேலும், பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்றும் அஞ்சப்படுகிறது.
இதையும் படிங்க : சொத்து வரி உயர்வை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும் – ஜி.கே.வாசன்!
உயிரிழந்தவர்களில், பெண் ஒருவரும் பிறந்து ஒரு மாதமேயான அவருடைய இரட்டை குழந்தைகள் ஆகியோரும் உயிரிழந்து உள்ளனர். இதேபோன்று, மரம் முறிந்து விழுந்ததில் வீடு சேதமடைந்ததில் 89 வயது மூதாட்டி ஒருவர் மரணம் அடைந்துள்ளார்.
ஹெலன் சூறாவளி வடக்கு நோக்கி நகர்ந்து ஒஹியோ மற்றும் இண்டியானா மாகாணத்திலும் மின்சாரம் தடைப்பட்டு இருந்தது. இதனால், பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் வகுப்புகள் ரத்து செய்யப்பட்டன. புளோரிடா விமான நிலையங்கள் மூடப்பட்டன. பாலங்கள் பரிசோதிக்கப்பட்டன.
அமெரிக்கா மட்டுமின்றி மெக்சிகோவிலும் வெள்ளநீர் சூழ்ந்ததால் மரங்கள் அடியோடு சாய்ந்தன. கியூபாவின் மேற்கே 2 லட்சம் வீடுகள் மின் இணைப்பு வசதியின்றி துண்டிக்கப்பட்டு இருந்தன.