மலேசியாவில் இருந்து நட்சத்திர ஆமைகளை கடத்தி வந்த சென்னையைச் சேர்ந்த பயணியை கைது செய்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்திக் கொண்டுவரப்பட்ட 2,600 சிவப்பு காது அலங்கார நட்சத்திர ஆமைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
சென்னையைச் சேர்ந்த பயணியை கைது செய்த அதிகாரிகள் இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர்ந்து விமானம் மூலமாக கடத்தி வரப்பட்ட நட்சத்திர ஆமைகளை மீண்டும் மலேசியா நாட்டிற்கு திருப்பி அனுப்ப சுங்கத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
அதற்கான செலவுகள் அனைத்தையும் கடத்திக் கொண்டு வந்த அந்த கடத்தல் மன்னனிடமே வசூலிக்க அதிகாரிகள் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த வகை சிவப்பு காது அலங்கார நட்சத்திர ஆமைகள், குளிர் பிரதேசமான தாய்லாந்து, மலேசியா, ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட இடங்களில் அதிகமாக காணப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.