திருப்பூரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே தோட்டத்து வீட்டில் இருந்த தந்தை, மனைவி, மகன் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் . தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உயிரிழந்தவர்களின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Also Read : ‘விடாமுயற்சி’ படத்தின் டீஸர் வெளியானது..!!
இந்நிலையில் கொலை நடந்த வீட்டில் 8 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டதாகக் கூறும் நிலையில் 5 தனிப்படைகள் அமைத்து காவல்துறை விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது.
3 பேரை கொலை செய்தவர்களைப் பிடிக்க 5 தனிப்படைகள் அமைத்து திருப்பூரின் பல்வேறு பகுதிகளில் வாகன தணிக்கையில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.