சென்னை பெரம்பூர் ரயில் நிலையம் அருகே முட்புதரில் கதறிய குழந்தையை அங்கிருந்த ஆட்டோ ஓட்டுனர்கள் மீட்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
சென்னை பெரம்பூர் ரயில் நிலையம் நடைமேடை அருகில் உள்ள முட்புதரில் 3 மாதம் மதிக்க தக்க பெண் குழந்தை ஒன்று அளித்துள்ளது . அப்போது அங்கிருந்த ஆட்டோ ஓட்டுநர்கள் குழந்தையின் அழுகை சத்தத்தை நோக்கி சென்று குழந்தையை மீட்டுள்ளனர்.
Also Read : 6000 சாலைகளில் பேட்ச் – நல்ல செய்தி சொன்ன மேயர் பிரியா..!!
இதையடுத்து பெரம்பூர் இரும்பு பாதை காவல் நிலையத்திற்கு சென்ற ஆட்டோ ஓட்டுநர்கள் காசிநாதன், முரளி, ரஜினி ஆகியோர் குழந்தை குறித்து காவல் நிலையத்தில் கூறி குழந்தையை பத்திரமாக ஒப்படைத்தனர்.
குழந்தையை பெற்றுக்கொண்ட போலீசார் குழந்தையை வீசி சென்ற மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.