சென்னை விமான நிலையத்தில் நட்சத்திர ஆமைகளை கடத்த முயன்ற 3 பேரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னையில் இருந்து மலேசியாவுக்கு புறப்பட இருந்த விமானத்தில் செல்வதற்காக பயணிகள் காத்திருந்த போது 3 பேர் வழக்கத்திற்கு மாறாக அட்டைப்பெட்டிகளுடன் நின்றுள்ளனர் .
இதையடுத்து அங்குள்ள சுங்கத்துறை அதிகாரிகள் கையில் இருக்கும் அட்டை பெட்டிகள் குறித்து விசாரித்தபோது அரிசி, மளிகை பொருட்களை மலேசியாவிற்கு கொண்டு செல்வதாக மூவரும் தெரிவித்துள்ளனர்.
பின்னர் அந்த பெட்டி அசைந்ததை வைத்து அதனை திறந்து காட்ட சொன்னபோது அதில் சுமார் ₹15 லட்சம் மதிப்பிலான 780 நட்சத்திர ஆமைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அந்த மூவரையும் கைது செய்த அதிகாரிகள் இந்த கடத்தல் சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .
சென்னை விமான நிலையதில் உள்ள கெடுபிடிகளை மீறி பல லட்சம் மதிப்பிலான நட்சத்திர ஆமைகளை துணிச்சலாக வெளிநாட்டிற்கு கடத்த முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படியுள்ள நிலையில் அந்த அனைத்து ஆமைகளையும் பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் அதனை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டுசென்றுள்ளனர்.