வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரம் நாளுக்கு நாள் பூதாகரமாக வெடித்துக்கொண்டிருக்கும் நிலையில் இந்த வழக்கில் குற்றவாளிகள் என கருதப்படும் 3 பேர் தற்போது கொடுத்த வாக்குமூலம் புதிய ட்விஸ்ட்டை கொடுத்துள்ளது.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது . பட்டியல் இன மக்கள் பயன்படுத்தும் அந்த குடிநீர் தொட்டியில் மனிதாபிமானமின்றி அரங்கேறிய இந்த கொடூரம் காவல்துறைக்கு நெருக்கடியை கொடுக்க இந்த வழக்கோ பின்னர் CBCID-க்கு இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் கடந்த சில நாட்களுக்கு இந்த விவகாரம் தொடர்பாக வீடியோ ஒன்று வெளியாகி வைரலாக வலம் வந்தது.
இதையடுத்து இந்த வழக்கில் 3 பேருக்கு எதிராக சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் குற்றம் செய்தவர்கள் என்று கூறப்படும் முரளிராஜா . சுதர்சன் , முத்துகிருஷ்ணன் ஆகியோர் ஜூனியர் விகடனுக்கு கொடுத்துள்ள பேட்டி வைரலாக வலம் வருகிறது.
இந்த விவகாரம் குறித்து அந்த மூவரும் கூறிருப்பதாவது :
நாங்கள் குடிக்கும் தண்ணீரில் திடீரென துர்நாற்றம் வீசியது என்னவென்று தெரியாமல் அருகில் இருந்த அனைவரும் சொன்ன ஒரே பதில் எங்களுக்கும் அதே துர்நாற்றம் தான் வீசுகிறது என்று சொன்னார்கள் சரி குடிநீர் தொட்டியில் ஏறிபார்ப்போம் என்று ஏறியபோது தான் நாங்கள் குடிக்கும் குடிநீரில் யாரோ மலம் கலந்திருப்பது தெரியவந்தது.
அதை நாங்கள் விடியோவாக எடுத்து வைத்தோம் அதனை காவல்துறையினரிடமும் காட்டினோம் சில பேர் மீது சந்தேகம் உள்ளது என்றும் கூறினோம் ஆனால் காவல்துறையோ இது சாதி ரீதியான பிரச்சனையாக மாறிவிட கூடாது என்பதற்காக நாங்கள் சொன்னவர்களை மேலோட்டமாக விசாரித்துவிட்டு முழு விசாரணையையும் எங்கள் மீதே நடத்தினார்கள் . நாங்கள் குடிக்கும் நீரில் நாங்களே மலம் கலப்போமா.
தண்ணீரில் மலம் இருப்பதை நாங்கள் வீடியோ எடுத்தோம் ஆனால் அதை நாங்க கலக்குறப்ப எடுத்த வீடியோ’னு இப்போ சித்திரிக்கிறாங்க . நாங்கள் தான் இந்த கொடூர செயலை செய்தோம் என்று சொல்கிறார்கள் எங்களுக்கு எதிரா எக்கச்சக்கமான ஆதாரங்களை போலீஸ் வைத்துள்ளதாகவும் சொல்கிறார்கள் இவை அனைத்தும் அப்பட்டமான பொய்.
Also Read : வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது இஸ்ரோவின் 100வது ராக்கெட்..!!
இப்போ விசாரணை அதிகாரியா இருக்குற கல்பனா எங்களை கோயிலுக்கு அழைச்சிட்டுப் போயி, நீங்களே குற்றத்தை ஒத்துக்க’னு சொன்னாங்க. நாங்க தப்பு பண்ணினோம்னு கண்டுபிடிச்சிட்டதாகவும், ஆதாரம் இருக்குன்னும் சொல்றவங்க,ஏன் எங்களை ஒத்துக்கச் சொல்லிக் கெஞ்சணும். சி.பி.சி.ஐ.டி-ங்கிறது பெரிய அமைப்பு. அவங்களுக்கு இல்லாத அதிகாரம் இல்ல. ஆனாலும், எங்களுக்கு எதிரா எந்த ஆதாரத்தையும் அவங்களால் சொல்ல முடியல. ஏன்னா, நாங்கதான் தப்பே பண்ணலயே.. அவங்க பார்வையில குடிக்கிற தண்ணியில மலம் கலந்தது தப்பில்ல..அதை வெளியே சொன்னதுதான் தப்பு. இப்பவும் சாதியச் சொல்லி நாங்க இரக்கப்பட வெக்கிறோம்னு நினைக்காதீங்க.. உண்மையாவே நாங்க செஞ்ச ஒரே தப்பு, இந்தச் சாதியில் பொறந்ததுதான்.
சம்பவத்தின் போது அந்த குடிநீர் தொட்டி அருகில் சந்தேகத்திற்கு இடமான வகையில் ஒரு பையன் இருக்கிறான் அவனை பிடித்து விசாரிக்க சொன்னோம் ஆனால் அவர்கள் ரொம்பவே அலட்சியமாக இருந்தார்கள்.
இந்த சம்பவம் நடந்து 2 வருஷம் ஆகியும் குற்றவாளிகளை பிடிக்க முடியாததால் காவல்துறைக்கு நெருக்கடி அதிகமாகிருச்சு அதன்காரணமாகவே எங்களையே பலிகடாவாக்கி குற்றப்பத்திரிகை தாக்கல் பண்ணியிருக்காங்க.
பாதிக்கப்பட்டவங்க நாங்க. நியாயமான விசாரணைக்குப் போராடினவங்க நாங்க. குற்றவாளிகளைச் சீக்கிரம் கண்டுபிடிக்கச் சொல்லி வற்புறுத்தினவங்க நாங்க. கடைசியில குற்றவாளிகளும் நாங்க. எங்க குடும்பம் குடுக்குற தண்ணீரில் நாங்களே எப்படி இந்த கொடூர செயலை செய்வோம் என அந்த மூவரும் தெரிவித்துள்ளனர்.