சென்னையில் 3 ஆவது குழந்தையும் பெண் குழந்தையாக பிறந்ததால் ஆத்திரமடைந்த தந்தை சத்தமின்றி கதையை முடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை வியாசர்பாடியில் வசித்து வரும் ராஜ்குமார் என்பவருக்கு திருமணம் ஆகி 2 பெண் குழந்தைகள் உள்ளது . இந்நிலையில் ஆன் குழந்தை வேண்டும் என ஆசைப்பட்ட ராஜ்குமாருக்கு கடந்த 9 நாட்களுக்கு முன் 3 ஆவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது.
Also Read : உத்தரப்பிரதேசத்தில் பயணிகள் ரயில் தடம் புரண்டு கோர விபத்து..!!
இதனால் ஆத்திரமடைந்த ராஜ்குமார் அந்த பச்சிளம் குழந்தையை கத்திரிக்கோலால் குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அந்த குழந்தையை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அந்த குழந்தை சிகிச்சை பலனின்றி இறந்துள்ளது .
இதையடுத்து சந்தேகமடைந்த மருத்துவர்கள் போலீசிடம் தகவல் கொடுக்க போலீசார் நடத்திய விசாரணையில் குழந்தையின் தந்தை ராஜ்குமார் தான் இந்த கொடூர செயலை செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர் மீது வழக்கு பதிந்த போலீசார் அவரை சிறையில் அடைத்துள்ளனர்.