Site icon itamiltv.com

ஐஎன்எஸ் அரிதாமன்: இந்திய கடற்படையில் வலிமை சேர்க்கும் புதிய நீர்மூழ்கி கப்பல்!

உள் நாட்டில் தயாரிக்கப்பட்ட 3வது அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் ஐஎன்எஸ் அரிதாமன் இந்திய கடற்படையில் சேர்ந்தது.

ஆந்திர மாநில விசாகப்பட்டினத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், ஐஎன்எஸ் தாராகிரி போர்க் கப்பல் உடன் இணைக்கப்பட்டு, ஐஎன்எஸ் அரிதாமன் கடற்படையில் சேர்க்கப்பட்டது.

இந்த நீர்மூழ்கி கப்பல் சுமார் 7,000 டன் எடையில் தயாரிக்கப்பட்டது. அதன் 90 சதவீதம் உள்நாட்டு தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இது தண்ணீருக்குள் மணிக்கு 45 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டது. இந்திய கடற்படையில் உள்ள ஐஎன்எஸ் அரிஹன்ட் மற்றும் ஐஎன்எஸ் அரிகட் கப்பல்களுடன் ஒப்பிடுகையில்,

இது இரண்டு மடங்கு சக்தி வாய்ந்தது. கப்பலில் ஏவுவதற்கான 8 ட்யூப்கள் உள்ளன.அரிதாமன் கப்பல் கொண்ட அணு ஏவுகணைகள் கடலிலிருந்து வான் மற்றும் தரை இலக்குகளை தாக்கும் திறன் பெற்றவை.

இதில் 24 ‘சகாரிகா கே-15’ ஏவுகணைகள் உள்ளன, இவை 750 கிலோமீட்டர் முதல் 1,500 கிலோமீட்டர் வரை இலக்குகளை துல்லியமாக தாக்கும் திறன் கொண்டவை.

இந்த நீர்மூழ்கி கப்பல் இந்தியாவின் கடற்படைப் பாதுகாப்பிலும், அணுசக்தி முன்னேற்றத்திலும் முக்கிய பங்கு வகிக்குமென குறிப்பிடப்பட்டுள்ளது.

Exit mobile version