ரஜிக்கோட் மைதானத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் இன்று மோத இருக்கும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது . இந்நிலையில் இந்த இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி கடந்த 22ம் தேதி நடைபெற்றது.
அனல் பறக்க நடைபெற இந்த போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பதிவு செய்தது . இதையடுத்து நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி தனது அபாரமான ஆட்டத்தால் 99 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை 2க்கு0 என்ற கணக்கில் இந்திய அணி கெத்தாக கைப்பற்றியது.
இதையடுத்து இந்த இரு அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி ராஜ்கோட்டில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது .
இந்த போட்டியில் இந்திய அணிக்கு எதிராக டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது. இதையடுத்து ஆஸ்திரேலியா அணியை தங்களது பந்துவீச்சால் தகர்க்கும் முயற்சியில் இந்திய அணி வீரர்கள் களம் கண்டுள்ளனர்.
மேலும் இந்த தொடரின் முதல் இரண்டு போட்டியில் ஓய்வில் இருந்த நட்சத்திர வீரர்களான ரோஹித் , விராட் கோலி , பூம்பரா உள்ளிட்ட வீரர்கள் இன்றைய போட்டியில் களம்காண்கின்றனர்.
இந்நிலையில் விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் நடைபெற இருக்கும் இந்த போட்டியில் எந்த அணி வெல்லப்போகிறது எந்த அணி தோல்வியை சந்திக்க போகிறது என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.