தமிழக அமைச்சரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு 3 வது இடம் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது .
இதுகுறித்த அரசாணையையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
முதல்வர் மு.க. ஸ்டாலினை தொடர்ந்து, திமுக பொதுச் செயலரும் நீா்வளத் துறை அமைச்சருமான துரைமுருகனுக்கு 2 வது இடம் அளிக்கப்பட்டுள்ளது. இவருக்கு அடுத்தபடியாக உதயநிதிக்கு 3வது இடம் அளிக்கப்பட்டுள்ளது.
Also Read : அதிபர் ஜோ பைடன் மனநலம் பாதிக்கப்பட்டவர் – முன்னாள் அதிபர் டிரம்ப் விமர்சனம்..!!
அவரைத் தொடா்ந்து, அமைச்சா்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, பொன்முடி, ஏ.வ.வேலு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு என ஏற்கெனவே இருக்கும் வரிசைகள் அப்படியே தொடர்ந்துள்ளன.
புதிதாக அமைச்சராக பொறுப்பேற்ற சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேந்திரனுக்கு 19வது இடமும், உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியனுக்கு 27வது இடமும் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.